தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (17.9.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் கொண்டாடினர். அதன் விவரம் வருமாறு:
தருமபுரி – காமலாபுரம்
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடபட்டது. அதில் சின்னசாமி கழக கிளை தலைவர், தலைமையில் கு.சரவணன் கழக மாவட்ட தலைவர் மாணிக்கம் கழக தொழிளாரணி – மாவட்ட செயலாளர், இரா.ராஜா ஆகியோர் முன்னிலையில் கழக காரி மங்கலம் ஒன்றிய தலைவர் சி.இராமசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர் இந்தநிகழ்வில் தோழர்கள் முத்து. முருகன், கிளைச் செயலர் கோவிந்தசாமி, பழனி கனிமொழி அன்புமணி பெரியார் பிஞ்சு முத்தமிழ் ஆகியோர் கலந்து கொண்டன்ர் . இறுதியில் அனைவருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கபட்டது.
சேலத்தில்…
தந்தை பெரியார் அவர்களின் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 17/09/2024 அன்று காலை 9 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு, மாவட்ட காப்பாளர் கி.ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டச் செயலாளர் சி .பூபதி, மாநகர் தலைவர் அரங்க இளவரசன், மாநகர செயலாளர் இராவண பூபதி, சூரமங்கலம் பகுதி தலைவர் பழ.பரமசிவம், செயலாளர் போலீஸ் ராஜு, பொதுக்குழு உறுப்பினர் கமலம், அம்மாபேட்டை பகுதி தலைவர் குமாரதாசன், செயலாளர் இமய வரம்பன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் மணிமாறன், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் அ.இ.தமிழர் தலைவர், மேட்டூர் முத்து ராணி, பா. வைரம், தொழிலாளர் அணி தலைவர் கணேசன், நெய்வேலி லட்சுமி, மேச்சேரி அண்ணாதுரை, உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் தாதகாப்பட்டி, கருங்கல்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, அயோத்தியாபட்டணம் பகுதிகளில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் கீழவடகரையில் முப்பெரும் விழா
பெரியகுளம் கீழவடகரை நூலக வாசகர் வட்டம் பகுத்தறிவாளர் கழகம் அழகர்சாமிபுரம் நம்மால் முடியும் நல சேவை சங்கம் இணைந்து தந்தை பெரியார் 146ஆவது, அறிஞர் அண்ணா116ஆவது பிறந்தநாள் விழா நூலகப் புரவலர்களுக்கு சான்று வழங்கும் விழா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவரும் சமூக ஆர்வலருமான அ.மோகன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மின்சார வாரியம் ஓய்வு புரவலர் ஜெயராஜ் வரவேற்புரையாற்றினார். பெரியகுளம் ஜெயராஜ் இன்டஸ்ட்ரி தொழில் அதிபர் பொறியாளர் புரவலர் J.C. ஜெயமனோகர் மற்றும் தேவதானப்பட்டி மாருதி டிம்பர்ஸ் உரிமையாளரும் கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேனாள் செயலாளருமான புரவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
நூலக புரவலர்களுக்கு சான்று வழங்கி பேச்சுப் போட்டியில் பங்குகொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கியும் மாவட்ட நூலக அலுவலர் சரவணக்குமார் சிறப்புரையாற்றினார். நேசம் தொண்டு நிறுவன இயக்குநர் நேசம் முருகன் பகுத்தறிவாளர் கழகத்தை சார்ந்த மாவட்ட பொருளாளர் TNSTC கருப்பணன் அழகர்சாமிபுரம் தலைவர் இப்ராஹிம் பாஷா, பொருளாளரும் வழக்குரைஞருமான காமராஜ், EB, முருகன் நம்மால் முடியும் நலசேவை சங்கம் தலைவர் மாரிமுத்து, தேனி மாவட்ட வழக்குரைஞர் சங்க பொருளாளர் வழக்குரைஞர் ஆறுமுகம், லயன்ஸ் கிளப் அட்வகேட் S.S.B சூரியநாராயணன், ஓய்வு பெற்ற யுனைடெட் இன்சூரன்ஸ் மேலாளர் பால்ராஜ், நூலகர்கள் குமரன் சந்திரசேகரன், நூலகர் கோவிந்தராஜ், தினக்கூலி நூலகர் பாண்டிய செல்வி, கவிஞரும் ஆசிரியருமான யாழ் தன்விகா, கவிஞர் தமிழ் வேந்தன், சுப்புராஜ், வடகரை வாசகர் வட்ட புரவலர் அன்பழகன், புரவலர் மணி பூசாரி, கீழவடகரை ஊராட்சி வார்டு உறுப்பினர் மகாலிங்கம், மேனாள் இராணுவர் புரவலர் ஜெயராமன் நாயுடு ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் இந்நிகழ்வில் வாசகர்கள், புரவலர்கள், ஆசிரிய பெருமக்கள் சமூக ஆர்வலர்கள் எழுத்தாளார்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வழக்குரைஞர் காமராஜ் நம்மால் முடியும் நலசேவை தலைவர் மாரிமுத்து, சுரேஷ் தாசரி, சென்னை அரசு ஒப்பந்தகாரர் அழகய்யா ஆகிய நான்கு நபர்களும் தலா ரூ. 1000/- செலுத்தி நூலக புரவலராக மாவட்ட நூலக அலுவலர் முன்பு தன்னை இணைத்துக் கொண்டார்கள். கீழவடகரை நூலகம் கூடுதல் பொறுப்பு நூலகர் ராஜகோபால் நன்றியுரை வழங்கினார்.
பெரியகுளம் கீழவடகரை நூலக வாசகர் வட்டம் பகுத்தறிவாளர் கழகம் அழகர்சாமிபுரம் நம்மால் முடியும் நல சேவை சங்கம் இணைந்து தந்தை பெரியார் 146 – அறிஞர் அண்ணா 116 – பிறந்தநாள் விழா நூலகப் புரவலர்களுக்கு சான்று வழங்கும் விழா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவரும் சமூக ஆர்வலருமான அ.மோகன் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார் மின்சார வாரியம் ஓய்வு புரவலர் ஜெயராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார் பெரியகுளம் ஜெயராஜ் இன்டஸ்ட்ரி தொழில் அதிபர் பொறியாளர் புரவலர் J.C.ஜெயமனோகர் மற்றும் தேவதான பட்டி மாருதி டிம்பர்ஸ் உரிமையாளரும் கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மேனாள் செயலாளருமான புரவலர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
மந்தைவெளியில் கழகக்கொடியேற்றம்
தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலம் அருகில் 17.09.2024 பிற்பகல் 12.00 மணி அளவில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா. மாரிமுத்து தலைமையில், மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி கழகக் கொடியை ஏற்றி வைத்தார். தொழிலாளர் அணி தலைவர் ச. மாரியப்பன், இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், க.விஜயராஜா, மா.இன்பக் கதிர், மா. இனியவள், பெரியார் ஆதவன் ஆகியோர் பங்கேற்றனர்.
மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பு
மந்தைவெளி வன்னியம்பதி குடியிருப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு இளைஞர் அணி சார்பில் 17.09.2024 பிற்பகல் 12.30 மணி அளவில். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இரா. மாரிமுத்து தலைமையில், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ந. மணிதுரை ஆகியோர் முன்னிலையில் மாவட்டத் தலைவர் இரா .வில்வநாதன் மாலை அணிவித்தார்.
தொழிலாளர் அணி தலைவர் ச. மாரியப்பன், இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், க.விஜயராஜா, மா.இன்பக் கதிர், மா. இனியவள், பெரியார் ஆதவன், பெரியார் பெருந்தொண்டர் பக்கிரிசாமி அவர்களின் மகன் குட்டி (அ.தி.மு.க), சு.கண்ணன் (126 ஆவது வட்டச் செயலாளர், வி.சி.க), பிரகாஷ் மற்றும் குடியிருப்பு பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர் . இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
ஆத்தூர்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் விழா – ஆத்தூர் வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் செந்தாரப்பட்டி தலைவாசல் பகுதி என கழக மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாட பெற்றது ஆத்தூரில் மாவட்ட தலைவர் த.வானவில் தலைமையில் கழக தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பல்வேறு அரசியல் கட்சிகளான திமுகவை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் அதேபோல ஆத்தூர் அதிமுக சட்டமன்றத் உறுப்பினர் ஜெய்சங்கர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஅய், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வெற்றி கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித நேய ஜனநாயக கட்சி, அருந்தமிழர் மக்கள் கட்சி, மனித உரிமைகள் கழகம் என சுமார் 500க்கும் மேற்பட்ட ஏராளமான இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், சிறுவர்-சிறுமிகள் என ஆத்தூர் நகரமே விழா கோலம் பூண்டது.
லட்சிய கொடியாம் கழக கொடியேற்றி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் புத்திர கவுண்டம்பாளையம் செல்வம் அன்பளிப்பாக வருகை தந்த அனைவருக்கும் எழுதுகோல் வழங்கியும் மகிழ்ந்தனர்
பின்னர் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான சமுகநீதி நாள் உறுதிமொழியோற்று விழாவை நிறைவு செய்தார்கள் .