சிறீநகர், அக்.11 தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவரைத் தேர்வு செய்வதற்காக சிறீநகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான நவா-இ-சுபாவில் கூடினர். இக்கூட்டத்தில் ஒமர் அப்துல்லா அக்கட்சியின் சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.