நாமக்கல், அக்.11- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கலைஞர் நூற்றாண்டு விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிட நாகரீகமான சிந்து சமவெளி நூற்றாண்டு விழா ஐம்பெரும்விழா தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு அய்யா ஆர்.ராஜேந்திரன் மா.மதிவேந்தன், திமுக மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்கள், இந்தியா கூட்டணியின் பொறுப்பாளர்கள், கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தை, சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக, திரா விடர் கழக மாவட்ட, மாநில நகர கழக பொறுப்பாளர்கள், மற்றும் தோழர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் பொத்தனூர் பெரியார் படிப்பகத்தில், சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை தலைவர், பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில், 10.10.2024 வியாழன் மதியம் 2.00 மணி அளவில் நடைபெற்றது. தலைமை கழக அமைப்பாளர்கள், ஈரோடு சண்முகம், தருமபுரி ஊமை.ஜெயராமன்,ஆத்தூர் சுரேஷ், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், வழக்கு ரைஞர் ப.இளங்கோ அவர்கள் முன்னிலையில், மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சைஇரா ஜெயக்குமார், நிகழ்ச்சி சிறப்பாக எவ்வாறு நடத்துவது என விளக்க உரையாற்றினார்கள்.
நிகழ்வில் மாவட்ட கழக தலைவர் ஆ.கு குமார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வை பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் க.ச. அசேன், சேலம் மாவட்ட பக தலைவர் வீரமணிராஜூ, குமாரபாளையம் நகர தலைவர் சு.சரவணன், திருச்செங்கோடு நகர தலைவராக பொறுப்பேற்றிருக்கும் வீ.மோகன், வீர முருகன், அறிவாயுதம், அன்பு தஞ்சை செந்தில், மற்றும் பெரியார் படிப்பகப் பொறுப்பாளர் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செங்கோட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொள்ளும் அய்ம்பெரும் விழா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருச் செங்கோடு நகர தலைவராக வீ.மோகனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செங்கோட்டில் திமுக பொறுப்பாளர்களை சந்தித்து நிகழ்ச்சி நடத்துவதற்கு ஆதரவு கேட்ட பொழுது, அனைத்து பொறுப்பாளர்களும் மிக்க மகிழ்ச்சியுடன், எங்களின் ஆதரவு திராவிடர் கழகத்திற்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கும், எப்பொழுதும் உண்டு என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
நிகழ்வை எவ்வாறு நடத்துவது என்று திட்டமிடுவதற்கு, திமுக பொறுப்பாளர்கள் தந்த உற்சாகத்தால், நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிப்போம்! சிந்தனையாளர்களை சந்திப்போம்! பொதுமக்களை சந்திப்போம்! விழாவினை சிறப்பாக செய்வதற்கு உண்டான, அடித்தளங்களை உண்டாக்குவோம்! என்ற உற்சாகத்துடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்து முடிந்தது.