9.10.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங். கூட்டணி ஆட்சி அமைக்கிறது: அரியானாவில் 3ஆவது முறையாக பாஜக வெற்றி.
* அரியானாவில் காங்கிரஸ் உட்கட்சி பூசல் காரணமாக தோல்வியுற்றது என்கிறார் கட்டுரையாளர் சிகா முகர்ஜி.
* தாழ்த்தப்பட்டோர் பிரிவினரில் உள் ஒதுக்கீடு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட அமைச்சர் உத்தம் குமார் தலைமையில் ஒரு நபர் குழுவினை தெலங்கானா அரசு அமைத்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானாவில் தசராவிற்குப் பிறகு ஜாதி கணக்கீடு எடுக்கப்படும், அரசு முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. உமர் அப்துல்லா முதலமைச்சராகிறார்.
தி டெலிகிராப்:
* பெங்களூரு அய்அய்எம்-இல் ஆசிரிய உறுப்பினர் தீபக் மல்கான், கல்வி நிறுவனத்தில் ஜாதி அடிப் படையில் துன்புறுத்தல் நடைபெறுகிறது; பன்முகத் தன்மை இல்லை என எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்காக, பதவியில் இருந்து தரமிறக்கிய தற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மேலாண்மை நிறுவனங்களின் (அய்அய்எம்) மேனாள் மாண வர்களும் கல்வியாளர்களும் கையெழுத்து இயக் கத்தைத் தொடங்கியுள்ளனர்.
– குடந்தை கருணா