உரத்தநாடு, அக். 6- உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா, இரா.ஈ.எழிலன் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதுரை சுப.பெரியார்பித்தன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? எனும் மேஜிக் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக தனது இரு கண்களையும் கட்டிக் கெண்டு இரு சக்கர வாகனத்தில் ஊர் முழுவதும் சுற்றி வந்து பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து மூடநம்பிக்கைகளை விளக்கி பல்வேறு மேஜிக் நிகழ்ச்சிகள் செய்து காட்டி உரையாற்றினார்.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு கிளை கழக செயலாளர் நா.வீரத்தமிழன் தலைமை தாங்கினார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழக தலைவர் த.செகநாதன், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் க.அறிவரசு, ஒன்றிய தொழிலாளர் அணித்தலைவர் துரை.தன்மானம், கிளைக் கழகத் தலைவர் அ.ராசப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் நகர் வெ.சக்திவேல் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில பெரியார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர் மா.இராமகிருஷ்ணன், மாவட்ட கலை இலக்கிய அணித் தலைவர் வெ.நாராயணசாமி, மாவட்ட வழக்குரைஞர் அணி செயலாளர் க.மாரிமுது, ஒன்றிய விவசாய அணித் தலைவர் மா.மதியழகன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், நகர கழக செயலாளர் பு.செந்தில்குமார், கிளைகழகத் தோழர்கள் மா.தென்னரம், ப.பாலகிருஷ்ணன், க.மாணிக்கவாசகம், பெரியார் நகர் சு.ராமதாஸ், இரா.மகேஸ்வரன், மக்கள் நலப் பணியாளர் சி.நல்லத்தம்பி, தலைமையாசிரியர் இரா.கஸ்தூரி உள்ளிட்ட ஏராளமான பெண்களும், மாணவர்களும், ஊர் மக்களும் கலநது கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக கிளை கழகத் தலைவர் அ.ராசப்பா அனைவருக்கும் நன்றி கூறினார்.