அரூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்!
அரூர், அக். 5- தர்மபுரி மாவட் டம் அரூர் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.10.2023ஆம் தேதி காலை 11 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ச.சாய்குமார் வர வேற்புரையாற்றினர். மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் தலைமை ஏற்று கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். மாவட்ட கழக செயலாளர் கு.தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. இராஜேந்திரன், மாவட்ட கழக துணைச் செயலாளர் வழக்குரைஞர் ரே.வடிவேலன் ஆகியோர் முன்னிலையேற்றனர்.
திராவிடர் மாணவர் கழக சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் மு.இளமாறன் தொடக்க உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மாவட்ட கழக தலைவர் அ. தமிழ்ச்செல்வன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அரூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி வாயில்களில் வாயிற் கூட்டம், கருத்தரங்கம், கவியரங்கங்கள் நடத்துவது எனவும், கழக ஏடான உண்மை இதழுக்கு – மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 50 உண்மை சந்தாக்களை திரட்டி அளிப்பது எனவும், திராவிட மாணவர் கழக அமைப்புகளை பள்ளி கல்லூரிகளில் அமைப்பது எனவும், தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தலைமை கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கைகளை பள்ளி கல்லூரி களில் மாணவர்களுக்கு வழங்கு வது எனவும், பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் வகையில் பல்வேறு பெயர்களில் நடத்தப்படும் ஆர். எஸ். எஸ். பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும் எனவும், பள்ளியில் தேர்வுக் காலங்களில் தனியார் பள்ளி, மற்றும் ஓரிரு அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களை வரவழைத்து தேர்வில் வெற்றி பெற வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக் கும் பாத பூஜை செய்யும் கொடு மையை தமிழ்நாடு அரசு கல்வித் துறை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் இரா. செந்தூர்பாண்டியன், மு.இளமாறன் ஆகியோருக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார்.
இறுதியில் மாணவர்களிடம் தந்தை பெரியார் உங்களுக்கு எந்த வகையில் ஈர்க்கப்பட்டுள்ளார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு மாணவர்கள் ஜாதி ஒழிப் பிற்காக, மூடநம்பிக்கை ஒழிப்பிற்காக, பெண்ணடிமை ஒழிப்பிற்காக, பகுத்தறிவு கருத்திற்காக, மனித நேயத்திற்காக, அவரிடம் இருந்த துணிச்சலுக்காக, அவர் சொல்லும் பதிலுக்காக பெரியாரை எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று பதில் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாளையம் சஞ்சீவன், அன்புச்செல்வி, மாயக் கண்ணன், சார்லஸ், ஜாக்குலின், அகரன், ஜாக்கின், பிரவீன், சக்திவேல், வினோபாலா, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.