சிதம்பரம், அக். 4- சிதம்பரம் மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் வலசக்காடு பூ.அரங்க நாதன் நினைவேந்தல் படத்திறப்பு 22.9.2024 அன்று காலை 10 மணிக்கு. அன்னாரின் சொந்த ஊரான வலசக்காட்டில், ஒன்றிய தி.மு.க. மேனாள் செயலர் தங்க.நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார். படத்திறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், த.வா.க. மாநில பொறுப்பாளர் மு.பாலகுருசாமி, மாவட்ட இணைச் செயலர் யாழ்.திலீபன், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடுமாறன், மாவட்ட ப.க. செயலர் ச.செங் குட்டுவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி.சிலம்பரசன், காட்டுமன்னார்குடி ஒன்றிய தலைவர் இரா.செல்வகணபதி, ஒன்றிய செயலர் ப.முருகன், சேத் தியாத்தோப்பு நகர தலைவர் பா.இராசசேகரன் ஆகியோர் இரங் கலுரையாற்றினர். தொடக்கத்தில், பூ.அரங்கநாதனின் மகன் அர.வீரமணி வரவேற்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில், திருமுட்டம் ஒன்றிய செயலர் இரா.இராசசேகரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் பஞ்சநாதன் மற்றும் பூ.அரங்க நாதனோடு பணியாற்றிய நண்பர் கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் என்.இராசேந்திரன் நன்றி கூறினார்.