நீடாமங்கலம், செப்.30 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு நீடாமங்கலம் நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தங்க.வீரமணி, கழக ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சக்கண்ணு, ஒன்றிய அமைப்பா ளர் மா.பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளர் சதா.அய்யப்பன், நீடா நகரத் தலைவர், வா.சரவணன் ஆகியோர் முன்னிலையில், அனைத்துக் கட்சிகளின் சார்பில் தி.மு.க. நீடா மங்கலம் ஒன்றியப் பெருந்தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாவட்டத் துணைத்தலைவர் நீலன்.அசோகன், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் பி.கோவிந்தராஜ், மற்றும் பத்மநாதன், அதிமுக. மேனாள் பேருராட்சி மன்றத் தலைவர் ச.செந்தமிழ்ச்செல்வன், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஆதி.ஜனகர், அதிமுக நகரச் செயலாளர் இ.ஷாஷகான், அதிமுக.முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர். பி.வீரையன், பூக்கடை மோகன், த.மு.எ.ச. மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி, ஆகியோர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ப.க. மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் முன்னிலையில், நீடாமங்கலம் இளைஞரணி ஒன்றியத் தலைவர், க.சேகர், ப.க, நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் நா.இரவிச்சந்திரன், கழகத் தோழர் கருவாக்குறிச்சி கோபால், ப.க. ஒன்றியச் செயலாளர், க.முரளி, இளைஞரணி மாவட்டத் தலைவர். க.இராஜேஷ்கண்ணன், வடுவூர் கழகத் தோழர்கள் த.ஆசையொளி, து.உலக நாதன், லோகநாதன், நமச்சிவாயம், பூவனூர் கழகத் தோழர்கள் சந்திரசேகர், அனந்தராமன், பெரியகோட்டை சே.சுருளிராஜன், சோத்திரை மாணவர் கழகத் தோழர் ச.சாருகான், கதிர்வேலன், கோவில் வெண்ணி மாணவர் கழகத் தோழர் ந.கோபாலகிருஷ்ணன், கா.அஜய், ஒரத்தூர் பெரியார் பெருந்தொண்டர் மாணிக்கம், எடமேலையூர் ந.லெட்சுமணன், ஒன்றிய து.தலைவர் பி.வீராச்சாமி, பெரியார் பிஞ்சுகள் இர.மகிழினி, இர. நிகழினி, சே.முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் பேரணியாகப் புறப்பட்டு நீடாமங்கலம் தந்தை பெரியார் படிப்பகம், பழைய நீடாமங்கலம், பழையவட்டாட்சியர் அலுவலகம், நீடாமங்கலம் அண்ணா சிலை, ஜாதி ஒழிப்பு சட்ட எரிப்பு வீரர் தங்கராசு பாப்பம்மாள் இல்லம், ஒரத்தூர் ,ஆதனூர்மண்டபம், நகர், கோயில்வெண்ணி, கோயில் வெண்ணிமறைந்த செல்வராஜ் நினைவு கொடிக்கம்பம், கோயில்வெண்ணி தெற்குத்தெரு, பெரியகோட்டை, முன்னாவல்கோட்டை, எடமேலையூர், வடுவூர் ஊர்களில் ஊர்வலமாகச் சென்று அப்பகுதிகளில் உள்ள கழக லட்சியக்கொடியினை ஏற்றி சிறப்பித்த னர்.