பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) ஆய்வு மற்றும் மேம்பாட்டு, ஆய்வு இதழ்கள் வெளி யீட்டுப் பிரிவின் இயக்குநர் பேராசிரியர் பாலகுமார் பிச்சை தொடர்ந்து 5ஆவது ஆண்டாக (2020, 2021, 2022, 2023, 2024) உலகின் சிறந்த ஆய்வாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் அறிவியல் ஆய்விதழ் களை வெளியிடும் எல்செவியருடன் இணைந்து 19.09.2024 அன்று “2024ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விஞ் ஞானிகளின் ‘ஸ்டான்ஃபோர்ட்-எல்செ வியர்’ முதன்மை ஆய்வாளர்கள் பட்டியலை” வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் பேராசிரியர் பாலகுமார் பிச்சை உலகின் சிறந்த அறி வியல் ஆய்வாளர்-2024 பட்டியலில் தொடர்ந்து 5ஆவது ஆண்டாக மருந் தியல் & மருந்தகவியல் துறையின் கீழ் (2020, 2021, 2022, 2023, 2024 ஆண்டுகள்) இடம்பெற்றுள்ளார்.
பேராசிரியர் பாலகுமார் பிச்சை இதய இரத்த நாளம், நீரிழிவு மற்றும் சிறுநீரக மருந்தியல் மற்றும் நச்சியல், ஆராய்ச்சி முறையியல் மற்றும் உலகின் தரம்மிக்க அறிவியல் ஆய்வு இதழ்களில் பங்களிப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 135க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 16, 2024 நிலவரப்படி, 6208 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை வெளி யிட்டுள்ளார் , பனனாட்டு அளவில் இவரது பங்களிப்பு இதை ( “H குறியீடு”) 42 ஆகும்
பேராசிரியர் பாலகுமார் பஞ்சாப் பல்கலைக்கழகம்-பட்டியாலா, பஞ்சாப், இதய இரத்த நாள மருந்தியலில் சிறப்புப் பயிற்சியுடன் மருந்தியல் அறிவியல் மற்றும் மருந்து ஆராய்ச்சித் துறையில் 2007 ஆம் ஆண்டு பிஎச்.டி. பட்டங்களை பெற்றார்.
டாக்டர் பாலகுமார் பிச்சை தற்போது பெரியார் மணியம்மை அறிவியல் & தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் இயக்குநராக உள்ளார்
முன்னதாக, டாக்டர் பாலகுமார் சவுதி அரேபியாவின் கிங் காலித் பல்கலைக் கழகத்தின் மருந்தகவியல் கல்லூரியில் மருந்தியல் பேராசிரியராகவும், மலேசி யாவின் AIMST பல்கலைக்கழகத்தின் மருந்தகவியல் பிரிவின் மூத்த இணைப் பேராசிரியர் மற்றும் மருந்தியல் பிரிவின் தலைவராகவும் பணியாற்றினார்.
2009இல் கனடாவின் மாண்ட்ரீல் பல்கலைக் கழகத்தில் சிறப்பு ஆய்வாள ராகவும் இருந்தார். மேலும் அவர் மலேசி யாவின் செலாங்கோரில் உள்ள டேலர் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறை இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அய்ரோப்பா (இத்தாலி) அடிப்படை யிலான எல்செவியர் இதழான ‘பார்ம கால ஜிக்கல் ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக ‘ உள்ளார்.
புகழ்பெற்ற ‘நேச்சர்’ அறிவியல் ஆய் விதழ் பேராசிரியர் பாலகுமாரின் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதயம்-சிறுநீரக அறிவியல் குறித்து பல ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
பன்னாட்டளவில் புகழ்பெற்ற WoS-SCIE இதழ்களின் சிறந்த ஆசிரியர், மற்றும் சிறந்த ஆய்வாளர் விருதுகளைப் பெற்றுள்ளார். பேராசிரியர் பாலகுமார் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருந்தியல், மருத்துவம், உயிர்மருத்துவம், பொறியியல், அறிவி யல், கணினி அறிவியல், மேலாண்மை, கட்டடக்கலை, கலை மற்றும் மொழிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அறி வியல் அறிஞர்களோடு இணைந்து மாணவர் களுக்கு பல பயிலரங்குகள் மற்றும் வகுப்புகளை நடத்தியுள்ளார்.