டெஹராடூன், செப்.15- உத்தராகண்ட் காவல் துறையினரால் டெஹராடூனில் நடந்த கூட்டம் ஒன்றில் சிறு பான்மையினரை அழித் தொழிக்க ஆயுதம் ஏந் துங்கள் என்று கூறிய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் காசியாபாதில் உள்ள சிவசக்தி மடத்தின் தலைவராக உள்ள யதி ராம்ஸ்வரூபானந்த் கிரி மீது, சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து பேசியதாகக் காட்டும் ஒரு காணொலி வைரலான தைத் தொடர்ந்து, பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை வளர்க்கும் குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
வைரலான காணொலி யில், சிறுபான்மை சமூகத்தினரிடமிருந்து வந்த பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க இந்துக்கள் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
டெஹராடூன் காவல் துறை வெளியிட்ட அறிக் கையின்படி, வைரலான காட்சிப் பதிவை சுயமாக கவனத்தில் கொண்டு கிரி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரி வித்தனர்.
“எங்களது சமூக ஊடக கண்காணிப்புக் குழு, பேச்சில் பயன் படுத்தப்பட்ட வார்த்தை கள் குறிப்பிட்ட ஜாதி, மதத்திற்கு எதிரானவை என்றும், வெறுப்புப் பேச்சு வகையின் கீழ் வருகின்றன என்றும் கண்டறிந்தது. உச்ச நீதிமன்றத்தின் வழி காட்டுதல்களின்படி, வெறுப்புப் பேச்சு குறித்து தெரிய வந்தவுடன் விசாரணைக்குப் பிறகு, துணை ஆய்வாளர் தேவேந்திர குப்தாவின் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது,” என்று டேராடூன் காவல்துறை அதிகாரி அஜய் சிங் கூறினார்.
ஊடகவியலாளர் சங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச் சியில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வியில் சிறுபான்மையினரை அழித்தொழிக்க ஆயுதம் ஏந்த வேண்டும் என்று பேசி இருந்தார்.
பல சாமியார்கள் பங்கேற்க உள்ள விஸ்வ தர்ம சன்சத் இந்த ஆண்டு டிசம்பர் 14 முதல் 21 வரை நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.
இந்த சன்சத்தின் போது, உத்தராகண்டை “இஸ்லாம் இல்லாத மாநிலமாக” மாற்றுவது குறித்து விவாதிப்பதாக அவர் கூறினார்.
சிறுபான்மை சமூகத் தினர் பெரும்பான்மை சமூகத்தை விட அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர் என்றும், ஹிந்துக்கள் “ஆண்மையற்றவர்களாக” மாறிவிட்டனர் என்று பேசியுள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 (மதம், இனம், பிறப் பிடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப் படையில் பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்தைப் பராமரிப்பதற்கு எதிரான செயல்கள்) மற்றும் 353 (பொது அமைதியைக் குலைக்கும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.