டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திறம்பட செயல்படும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி குறைப்பு; கேரளாவில் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மாநாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில நிதி அமைச்சர்கள் குமுறல்.
* ஒன்றிய வரி விதிப்பு தொகுப்பில் இருந்து 50 சதவீதத்தை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி எதிர்க்கட்சிகள், வழக்குரைஞர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இந்துக்களே ஆயுதம் ஏந்துங்கள்’ என ‘சிறுபான்மை யினரை குறிவைத்து வெறுப்பூட்டும் வகையில் பேசியதாக’ யதி ராம்ஸ்வரூபானந்த் கிரி மீது வழக்குப் பதிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* புதுடில்லியில் 8.9.2024 அன்று விஸ்வ இந்து பரிஷத்தின் சட்டப்பிரிவு ஏற்பாடு செய்த “நீதித்துறை சீர்திருத்தம்” கூட்டத்தில், மேனாள் நீதிபதிகள் பங் கேற்பு. கருநாடக ஹிஜாப் தடையை உறுதி செய்த உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதிCவும் கலந்து கொண்டார்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* தமிழ்நாடு மாணவர்கள் இருமொழிக் கொள்கை யையே விரும்புகிறார்கள்; இந்த ஆண்டு பிரசி டென்சி கல்லூரியில் பி.ஏ. ஹிந்தி படிப்பில் மூன்று மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். போதிய வரவேற்பு இல்லை என அமைச்சர் க.பொன்முடி பேச்சு.
– குடந்தை கருணா