புதுக்கோட்டை, செப். 12- புதுக் கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.அறிவொளி இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மு.அறிவொளி கத்தூரி பாய் வாழ்விணையரின் திருமகள் கணினி திருச்சி பூணாம்பாளையம் செ.ஜெயபாலன் சரசுவதி இணை யரின் திருமகன் ஜெ.கோபிநாத் ஆகி யோருக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கலந்து கொண்டு தலைமை வகித்து மணமக்களுக்கு மலர் மாலை எடுத்துக் கொடுத்து மணவிழாவை நடத்தி வைத்தார்.
இந்த மணவிழாவுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து மடல் அனுப்பி இருந்தார். மேலும் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களும் வாழ்த்து மடல் அனுப்பி தனது வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் மணமக்களுக்குத் தெரிவித்திருந்தார்.
கழகத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் தினார். மேலும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை மாநகரத் தாய் திலகவதி செந்தில், சட்டமன்ற உறுப் பினர் டாக்டர் வை.முத்துராஜா, மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், மாநகரத் துணைத் தலைவர் லியாகத் அலி, சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திர சேகரன், மாநகர அவைத் தலைவர் அரு.வீரமணி, முன்னாள் அமைச்சர் டாக்டர் க.சந்திரசேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் மாத்தூர் கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், வி.சி.க மாநிலத் துணைத் தலைவர் தெ.கலைமுரசு, தொகுதிச் செயலாளர் இரா.திருமறவன், அதிமுக மேனாள் மாநில அமைப்புச் செயலாளர் கே.ஆர்.கணேசன், தமிழர் கழகம் புதுக்கோட்டை
இரா.பாவாணன், புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி, திராவிடர் கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் கா.மாரிமுத்து, மாவட்டச் செய லாளர் க.முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அறந்தாங்கி த.சவுந் தரராசன், கந்தர்வகோட்டை மூ.சேகர், புதுக்கோட்டை செ.இராசேந்திரன், துணைத் தலைவர் சு.கண்ணன், துணைச் செய லாளர் வெ.ஆசைத்தம்பி, மாநில ப.க.அமைப்பாளர் அ.சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளர் மாங் காடு சுப.மணியரசன், ம.மு.கண்ணன் உள்ளிட்ட கழகத் தோழர்களும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.