சகமதத்தவனையே நீ என்ன ஆள் என்று கேட்டு அவனை தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாக்கும் ஒரே ஒரு மதம் ஹிந்துமதம் மட்டுமே.
சூத்திரன் என்று இழிவுபடுத்தியது யார்? தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைத்தது யார்?
தொட்டால் தீட்டு என்று சொன்னது யார்? பார்த்தால் பாவம் என்று சொன்னது யார்?
இந்துக் கடவுளை வணங்க அனுமதி மறுத்தது யார்? கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்தது யார்?
கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் தீட்டாகிவிடும் என்று சொன்னது யார்? அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகன் ஆகக் கூடாது என்று சொல்பவர் யார்?
எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னது யார்? கற்றால் நாக்கை அறுக்க வேண்டும் என்று சொன்னது யார்?
கற்பதைக் காதில் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்னவர் யார்? படித்ததை நெஞ்சில் நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப்பிளக்க வேண்டும் என்று சொன்னது யார்?
கூலி கொடுத்தோ கூலி கொடுக்காமலோ வேலை வாங்கலாம் என்று சொன்னது யார்? சொத்து சேர்த்தால் அந்த சொத்தைப் பிடுங்கிக் கொள்ளலாம் என்று சொன்னது யார்?
பெண்களைப் பொட்டுக்கட்டி தேவதாசியாக்கியது யார்? பெண்களைக் குழந்தைத் திருமணம் செய்து கொடுத்தது யார்? பெண்களை கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற்றியது யார்?
பெண்களை விதவையாக்கி வீட்டுக்குள் முக்காடு போட்டு முடக்கியது யார்? பெண்களுக்கு அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முடக்கியது யார்? பெண் ஹிந்து மதக்கடவுளைக் கூட வணங்க அனுமதி மறுத்தது யார்?
இந்த யார் என்ற கேள்விக்கு விடை பார்ப்பனர் என்று வரும், இவர்கள் சக ஹிந்து மதத்தவரைத்தான் மேலே கூறிய அனைத்து கொடுமைகளையும் செய்தனர்.
இதைக் கேள்வி கேட்டால் கலாச்சாரம், பாரம்பரியம் என்று கூறி நாட்டின் அமைதியை ஒற்றுமையை ஆண்டாண்டுகாலமாக உயர்ந்து நிற்கும் உன்னத கலாச்சாரத்தை அழிக்க திட்டமிட்டு செயல்படும் வெளிநாட்டு மதவாத அமைப்புகளின் சதி என்கிறார்கள்.
சகமனிதனை அதாவது தானும் ஹிந்து அவனும் ஹிந்து என்று இருந்தும் அவனிடம் நீ என்ன ஆள் என்று கேட்கும் பேரவலம ஹிந்து மதத்தில் மட்டும்தான் உள்ளது.