கன்னியாகுமரி,ஆக.12- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரை யாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார்.
மாவட்ட கழக துணைத் தலைவர் ச. நல்ல பெருமாள் மாநகர செயலாளர் மு.இராஜ சேகர், மாவட்ட பகுத்தறிவாளர் கழக. மாவட்ட செயலர் பெரியார் தாஸ், மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், மாவட்ட திராவிட மாணவர் கழக மாநில மேனாள் அமைப்பாளர் இரெ.இரஞ்சித் குமார் ஆகியோர் உரையாற்றினர். தோழர்கள் கூடங்குளம் பாலகிருஷ்ணன், சோ.முருகேசன்,அபி,போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வயநாட்டில் நிலச் சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவிப்பது, கும்பகோணத்தில் நடைபெற்ற திராவிடர்கழகப் பொதுக்குழுக் கூட்டத் தீர்மானங்களை முழுமனதாக ஏற்று, வரவேற்று குமரிமாவட்டத்தில் செயல்படுத்துவது, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51 ஏ.(எச்) பிரிவினை விளக்கும் கூட்டத்தை 21.8.2024 அன்று கொட்டாரத்தில் நடத்துவது, தந்தை பெரியாருடைய பிறந்த நாளை கிளைக்கழகங்கள் தோறும் கொள்கைப் பெருவிழாவாகக் கொண்டாடுவது, கன்னியாகுமரி யில் தொடங்கிய நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், தொழிற்சங்க அமைப்பாளர் க. யுவான்ஸ் வரவேற்பு வழங்கிய தோழர்கள் ச.நல்ல பெருமாள், ம.தயாளன், மா மணி, பா.பொன்னுராசன், ச.ச. மணிமேகலை தி்முக தோழர்களுக்கும் நன்றி தெரி விப்பது, திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கும், 155அடி
உயர பெரியார் உருவச் சிலை, பெரியார் உலகத்திற்கு நன்கொடையைத் திரட்டித் தருவது உள்ளிட்ட சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.