பெய்ஜிங், ஆக.4– 6000 கிலோ மீட்டர் தொலைவில் சிறிய நகர மருத்துவமனையில் நுரையீரல் புற்றால் பாதிக்கப் பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது சீன மருத்துவமனை ஒன்று.
தென்மேற்கு சீனாவின் கஷிகர் என்ற சிறிய நகரத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்க அருகில் உள்ள பெரு நகரத்திற்குக் கொண்டு செல்ல இருந்த நிலையில் அவரது நுரையீரல் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் தன்மையை இழந்துகொண்டு இருந்ததது.
புற்று பாதித்த பகுதியில் உள்ள சில கட்டளைப் புரதங்களை புற்றுச் செல்கள் தாக்கியதால் குறிப்பிட்ட புரதங்கள் செயலிழந்து விட்டன. இதன் காரணமாக இதர பகுதியில் உள்ள புரதங்களும் தவறான கட்டளையைப் பெற்று ஆக்ஸிஜன் பிரிப்பதை நிறுத்திக் கொள்ளத் துவங்கியதால் இந்தச்சிக்கல் ஏற்பட்டுவிட்டது.
உடனடியாக அவருக்கு புற்று பாதித்த நுரையீரல் பகுதியை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இதுதொடர்பாக சீனாவின் மறு பகுதியில் உள்ள கிழக்கு சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் உள்ள புற்றுநோய் மருத் துவ நிபுணர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து உடனடியாக அந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை செய்து புற்று பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
ஷாங்காய் புற்றுநோய் தலைமை மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர் கணனி மூலம் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார்.
இதனை அடுத்து கஷிகரினில் உள்ள மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு மின்னணுக் கருவி உதவியோடு அறுவைச் சிகிச்சையைத் துவங்கினார்.
சிறிய மருத்துவமனையில் செவிலி யர்கள் மற்றும் இதர மருத்துவர்களின் கண்காணிப்பில் 7.42 விநாடிகளில் பாதிக்கப்பட்ட பகுதியை வெற்றிகரமாக வெட்டி எடுத்தார். பொதுவாக இது போன்ற அறுவைச் சிகிச்சை 2 முதல் 3 மணிவரை நேரம் எடுக்கும் உதிரப்போக்கு அதிகம் இருக்கும்.
அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்கள் வெண்டிலேட்டரின் உதவியோடு இருக்கவேண் டிய நிலை இருக்கும்.
ஆனால், இவ்வகை நவீன அறுவைச் சிகிச்சை மூலம் 10 நிமிடத் திற்குள்ளாகவே அறுவை சிகிச்சை முடிந்தது. அதே போல் உதிர இழப்பும் மிகவும் குறைவாகவே இருந்தது.
மேலும், நவீன ஸிப் லாக் என்ற முறையில் தையல் போட்டதால் வெட்டுப்பட்ட இடத்தின்
தழும்புகள் கூட அவ்வளவாக தெரியாமல் போய் விடும்.
இந்த அறுவை சிகிச்சையின் காரணமாக சில மணி நேரங்கள் மட்டுமே வெண்டிலேட்டர் கண் காணிப்பில் வைத்து பிறகு சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றிவிட்டனர்.