சென்னை, ஜூலை 27- நாட்டிலேயே முதன்முறையாக மெட்ரோ ரயிலுக்கான இரட்டை அடுக்கு மேம்பாலம் அமைக் கும் பணி போரூர் அடுத்த ஆலப்பாக் கத்தில் தீவிரமாக நடந்து வருகிறது
சென்னையில் 2 பாதைகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில், 2ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நடந்து வருகிறது.
குறிப்பாக 3ஆவது வழித்தடம் மாதவரம்-சிறுசேரி சிப்காட் 4ஆவது வழித்தடம் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி புறவழிச் சாலை, 5ஆவது வழித்தடம் மாத வரம்- சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக 45க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கம், மேல்மட்டப்பாதைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங் கள் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
- இரட்டை அடுக்கு மேம்பாலம்
இதில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி (4ஆவது வழித்தடம்) மற்றும் மாதவரம் – சோழிங்க நல்லூர் (5ஆவது வழித்தடம்), இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது. இந்தப் பகுதிகளில் 3.75 கிலோ மீட்டர் தூரத்திறகு நாட்டிலேயே முதன் முறையாக இரட்டை அடுக்கு மேம்பாலப்பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வரு கிறது. நமது நாட்டில் இதுபோன்ற இரட்டை மெட்ரோ பாதை அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
பாலத்தை தாங்கும் தூண்கள் இந்த இரட்டை மெட்ரோ பாதையில் ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம்,காரம்பாக்கம் மற்றும் ஆலப்பாக்கம் ஆகிய 4 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன. 4ஆவது வழித்தடம் மற்றும் 5ஆவது வழித் தடம் பகுதி 110ஆவது தூண் பகுதி யில் தொடங்கி 242 வரை இணைவ தால் இந் தப்பகுதியில் இரட்டை பாதை அமைகிறது.
அதாவது இந்த இடைப் பட்ட தூரத்தில் சுமார் 152 தூண்கள் அமைகிறது. தரை மட்டத்தில் இருந்து 4ஆவது வழித்தடத்திற்கான மேம்பாலம் 50 அடியிலும், 5ஆவது வழித்தடத்திற்கான மேம்பாலம் 78 அடியிலும் அமையவிருக்கிறது. அப்பகுதியில் சாலையின் அகலம் 18 முதல் 22 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். பிளாட்பாரம் 170 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. பாலத்தை தாங்கும் தூண்கள் அதாவது தூண்களில் தொப்பி வடிவிலான கட்டுமானம் (பியர் கேப்கள்) அமைக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தூண்கள்மீது இரும்புப் பாலத்தை எடுத்து வைக்கும் பணியும் நடந்துவருகிறது.
சவாலான பணிகள்
இந்தப்பாதை மிகவும் குறுகலானதாக இருப்பதால் தூண்கள் அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் ராட்சத கிரேன்களை பயன்படுத்த முடியவில்லை. எனவே குறுகிய பகுதியில் பயன்படுத்தப்படும் ‘லான்சிங் கர்டர்’ வகை கிரேன்கள் ஆலப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்பட்டன. வடிவமைப்பு, இடப்பற்றாக்குறை ஆகியவை காரணமாக இரட்டை அடுக்கு மேம்பால கட்டுமானம் மிகவும் கடினமாக இருந்தது.
அதேபோல் இந்த பாதையில் நிலமும் நிலைப்புத் தன்மையுடன் இல்லாததால் பணிகளும் சவாலாக இருக்கின்றன. ஆலப்பாக்கம், வளசர வாக்கம், காரப்பாக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நுழைவுவாயில், வெளி யேறும் பகுதி அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. சென் னையில் 2ஆம் கட்ட மெட்ரோ கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது. வருகிற 2026ஆம் ஆண்டு முதல் படிப்படியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மெட்ரேர ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும்’ என்றுசென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறினர்.