27.7.2024 சனிக்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை:இரா.ஜெயக்குமார் (மாநலி ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வை.இளங்கோவன் (கழக காப்பாளர்), மு.அய்யனார் (கழக காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு செயலாளர், திராவிடர் கழகம்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), சு.விசயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்ட ப.க. தலைவர்) *பொருள்: 4.8.2024 கும்பகோணம் – திராவிடர் கழக மாநில பொதுக்குழு, சுயமரியாதைச் சுடரொளி இராசகிரி கோ.தங்கராசு நூற்றாண்டு விழா*நன்றியுரை: பேராசிரியர் க.சிவக்குமார் (குடந்தை மாநகரச் செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்)*விழைவு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, மற்றும் திராவிட மாணவர் கழகம் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் *இவண்: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: கும்பகோணம் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
அரசு பொது நூலக வாசகர் வட்டம் கடலார் அவர்களின் 15ஆவது நூல் ‘தூண்டில்’ வெளியீட்டு விழா
சென்னை: மாலை 4 மணி*இடம்: சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி என்.ஜீவரத்தினம் மணி மண்டபம், அரசு கிளை நூலகம், (இராயபுரம் மேம்பாலம் அருகில்) சென்னை *வரவேற்புரை: எல்.பிரவீன் குமார் (உச்சநீதிமன்ற வழக்குரைஞர்) *தலைமை: டி.லோகநாதன் (தலைவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வி அறக்கட்டளை) *நூல் வெளியிடுபவர்: ந.சந்திரா (இணை இயக்குநர், தமிழநாடு மீன்வளத்துறை) *நூல் பெறுபவர்: முனைவர் மு.கவிதா (சென்னை மாவட்ட நூலக அலுவலர்) *வாழ்த்துரை: புலவர் பா.வீரமணி, வழக்குரைஞர் பானுமதி பாஸ்கரன் *ஏற்புரை: கடலார்*ஒருங்கிணைப்பாளர்: கவிஞர் ரவிதாசன் *நன்றியுரை: த.கோமதி
28-07-2024 ஞாயிற்றுக்கிழமை
ஆவடி மாவட்ட கழக மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு இரு சக்கர வாகன பேரணியில் கலந்து கொண்ட ஆவடி மாவட்ட கழக தோழர்களுக்கு பாராட்டு. *முன்னிலை: பா.தென்னரசு (ஆவடி மாவட்டக் காப்பாளர்) *தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * ஆவடி மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.* அழைப்பு: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்)
வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம்
தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் – கல்வி வள்ளல் காமராசர் 122ஆவது பிறந்த நாள் விழா
வடக்குத்து: மாலை 6 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *தலைமை: ர.செல்வராசு (திமுக) *வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய கழக தலைவர்) *முன்னிலை: நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: சு.இராவணன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்)*சிறப்புரை: கா.எழிலரசன் *நன்றியுரை: இரா.சேகர்
பெரியார் பெருந்தொண்டர் ரெ.ஜெயபாலன்
நினைவேந்தல்-படத்திறப்பு
நிரவி: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் இல்லம், வள்ளுவர் தெரு, நிரவி *தலைமை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மாவட்ட தலைவர்) *படத்திறப்பாளர்:இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நினைவேந்தல் உரை:சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர், திராவிடர் கழகம்),
இரா.பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), ஏ.எம்.எச்.நாஜிம் (சட்டமன்ற உறுப்பினர்),
ஆர்.கமலக்கண்ணன் (காங்கிரஸ்), மு.நாக தியாகராஜன் (சட்டமன்ற உறுபபினர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *இங்ஙனம்: ஜெ.சந்திரா ஜெயபாலன்.