நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் ப. கோவிந்தராசன் அவர்களின் நான்காம் ஆண்டு நிைனவாக (22.7.2024) ‘பெரியார் உலக’த்திற்கு அவரது மகள் கோ. தென்றல் தமிழர் தலைவரிடம் ரூ.10,000 நன்கொடை வழங்கினார். (சென்னை – 18.7.2024).
திரைப்பட இயக்குநர் ஏ. பீம்சிங் 100ஆவது பிறந்த நாளில் (15.7.2024) அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை நேரில் சந்தித்து திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் சார்பாக அவரது மகன் பீ. இருதயநாத் ரூ.10,000 நன்கொடை வழங்கினார்.
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக 10,000 (34/40) ரூபாயை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.8,40,000 வழங்கியுள்ளார். (சென்னை, 18.07.2024).
சிவகாசி மணி உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இணையர், மகளிடம் உடல் நலம் பற்றி தமிழர் தலைவர் விசாரித்தார்.