ராப்டர் எனும் ஒருவகை டைனோசர்கள், பறவைகள் போன்ற கால்களைக் கொண்டிருந்தன என்பது ஏற்கெனவே அறியப்பட்ட விஷயம். இந்த ராப்டர்களில் ஒரு புது இனத்தைச் சீனாவின் புஜியன் மாகாணத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை, 16.4 அடி நீளம் வரை வளரும். இடுப்பிலிருந்து கால் வரை உள்ள உயரம் 6 அடி என்பதும் தெரிய வந்துள்ளது.
மதுசாரா கொழுப்பு மிகு ஈரல் நோய் என்பது, மதுப் பயன்பாட்டினால் வருவதல்ல. மாறாக மரபியல், உடல் பருமன் இவற்றால் வருவது. அய்ந்து நாட்கள் உண்பது, இரண்டு நாட்கள் பட்டினி இருப்பது என்ற முறையின் வாயிலாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.