துணை ராணுவப்படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையில் (பி.எஸ்.எப்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாஸ்டர், இன்ஜின் டிரைவர், ஒர்க்சாப் பிரிவுகளில் உதவி ஆய்வாளர் 11, கான்ஸ்டபிள் 46, தலைமை கான்ஸ்டபிள் 105 என மொத்தம் 162 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்த பின், தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2024 அடிப்படையில் உதவி ஆய்வாளர் பணிக்கு 22 – 28, மற்ற பணிக்கு 20 – 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: உதவி ஆய்வாளர் பணிக்கு ரூ. 247.20. மற்ற பணிக்கு ரூ. 147.20. எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.7.2024
விவரங்களுக்கு: rectt.bsf.gov.ina
பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வாய்ப்பு
Leave a comment