தருமபுரி, மே 16- தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யா டல் கூட்டம் 12.5.2024 ஞாயிறு மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியர் மன்றத்தில் கழக மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கு.சரவணன் தலை மையில் நடைபெற்றது.
தருமபுரி நகர தலைவர் கரு. பாலன் வரவேற்புரை ஆற்றி னார். ஆசிரியர் இர.கிருட்டின மூர்த்தி கூட்டத்தினை ஒருங் கிணைத்தார். கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரை யாற்றினார்.
அதனை தொடர்ந்து மாநில மகளிரணி செய லாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் ந. அண்ணாதுரை மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மா. செல் லதுரை மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி, மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராஜ், வழக்குரைஞர் தமிழ் பிரபாகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மு.சிசுபாலன், செயலாளர்
பெ. மாணிக்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செய லாளர் தி.அன்பரசு நகர அமைப் பாளர் கண். இராமச்சந்திரன் ஆகியோர் கருத்துரையாற்றி னர்.
கூட்டத்தில், மாவட்ட கழ கத்தின் சார்பில் 100 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்குவது எனவும், பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 460 மதிபெண் பெற்ற மாவட்ட தலைவர் கு.சரவணனின் மகன் ச. உதயகுமார், ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கீதா பெரிய மகன் மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் ச.கி.வீரமணி (500க்கு 472) ஆகியோருக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன் பயனாடை அணி வித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் சார்பில் வாழ்த்து தெரிவித்தும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
விடுதலை சந்தா புத்தகங் களை பெற்றுக் கொண்டு வழங்குவதாக உறுதியளித்த பொறுப்பாளர்கள்:
ஊமை ஜெயராமன்-10, கு. சரவணன்-10, தகடூர் தமிழ்ச் செல்வி-10, ந. அண்ணாதுரை-10, இர.கிருஷ்ணமூர்த்தி-10, தி. அன்பரசு-10, சி.காமராஜ்-5, பீம. தமிழ்பிரபாகரன்-10, மு.சிசுபாலன்-5, பெ.மாணிக்கம் -5, கரு.பாலன்–5, கண்.இராம சந்திரன்-5, ச.கி.வீரமணி-10, மொத்தம் = 105 ஆண்டு சந்தாக் கள்.
இறுதியாக திராவிட மாண வர் கழக மாவட்ட அமைப் பாளர் ச.கி.வீரமணி நன்றி கூறினார்.