செவிலியர்களுக்கென சமுதாயத்தில் மதிப்பை உருவாக்கிய ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ பிறந்த நாளான மே – 12 உலக செவிலியர் நாளாக கொண்டாடப்படுகிறது.
செவிலியர் பணி என்பது தொழில் அல்ல ; ஒரு வகையான தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையிலிருந்து போர்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணியாகும்.
ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத பணியாளர்கள் செவிலியர்கள்தான் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகும்.
செவிலியர்கள்தான் முதல் தாய் …. நமக்கு இன்னொரு தாய்!
அவர்களது பணி என்றென்றும் போற்றத்தக்கது மதித்து வணங்கத்தக்து.
உலக செவிலியர் நாள் வாழ்த்துகள்!