தஞ்சை, ஏப். 25 தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சி, இராசாசி நகரில் குறள் நெறியாளர் கு. பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் எழுச்சியோடு நடைபெற்றது.
படிப்பக இயக்குநர் புலவர் வீ.பொற்கோவன் வரவேற்புரை நிகழ்த்தினார். கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா. செல்வராசு தலைமை வகித்தார். படிப்பக புரவலர் பி.எஸ்.ஆர். மாதவராஜ் வாழ்த்துரை வழங்கினார்.
குறள்நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப் பகத்தினையும்,கு.பரசுராமன் படத்தினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி நூலகத்தை, நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் தொழிலதிபர் இராம. பாஸ்கரன் திறந்து வைத்து உரையாற்றினார்.
மேலும் படிப்பக வளர்ச்சிக்கு ரூ.25,000/வழங்கினார்.
நிகழ்வில் புரவலர்கள் கு.பரசுராமன் இணையர் விஜயலட்சுமி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பொறியாளர் இரா.சேகர், அமிர்தா புத்தக நிலையம் மா .திராவிடச் செல்வம், ,வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டத் தலைவர் வெள்ளூர் சோ.முருகேசன், செயலாளர் பொறியாளர் இரா. செந்தூர பாண்டியன், பொருளாளர் பேரா. குட்டிமணி, உறுப்பினர்கள்: மாநகர கழக தலைவர் பா. நரேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் உஷா செந்தில், நீலகிரி ஊராட்சி துணைத் தலைவர் சிங் .சரவணன், ஆட்டோ அடைக்கலராஜ், மன்னைசித்து, தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ இராமலிங்கம், மருத்துவக்கல்லூரி பகுதிசெயலாளர் ப. விஜயகுமார், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் அழகு.ராமகிருஷ்ணன், மு .தங்கமணி, புதூர் மு.அய்யப்பன், ஒன்பதாவது வார்டு உறுப்பினர் செ. சரவணன், கரு.சுவாமிநாதன், தமிழ் பல்கலைக்கழக மாணவர் அ.அறிவுச்சுடர், பேரா. மு .பிரபு, பேரா. சதீஷ்குமார், புலவர் இரா. மோகன்தாஸ், பொறியாளர் ஆ.கிருட்டிணமூர்த்தி, பொறியாளர் இரா. அமர்நாத் உள்ளிட் டோர் வரவேற்று சிறப்பித்தார்கள். வழக்குரைஞர் பவித்திரன் பரசுராமன் நன்றி கூறினார். படிப்பக பொறுப்பாளர்களுக்கும், நன்கொடை அளித்து சிறப்பித்த பெருமக்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகங்களை வழங்கினார் .
நிகழ்வில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழக காப்பாளர் மு.அய்யனார், தலைமைக் கழக அமைப்பாளர் க.குருசாமி, மாநகர் மாவட்டகாங்கிரஸ் தலைவர் பி .ஜி.இராஜேந்திரன், தஞ்சை துணை மேயர் டாக்டர் .அஞ்சுகம் பூபதி, கிங்ஸ் கலைக் கல்லூரி செயலாளர் பேராசிரியர் இராஜேந்திரன், கே.ஆர் பன்னீர்செல்வம், அமமுக தஞ்சை ஒன்றிய செயலாளர் கோவி.மனோகரன், கிராம பகுத்தறிவு பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி.க.அன்பழகன்,கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், பெரியார் வீரவிளை யாட்டுக் கழக மாநில தலைவர் பேரா.சுப்ரமணியம், செய லாளர் கபடி.நா.இராமகிருட்டிணன், மாநில கலைத் துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு உள்ளிட்ட பெருமக்கள் பங்கேற்று சிறப் பித்தார்கள்.