தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்தப் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: மைனிங் ஓவர்மேன் 52, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 21, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 13, டிரைய்னிங் இன்ஸ்ட்ரக்டர் 3, ஜூனியர் மைன் சர்வேயர் 11, மைனிங் சிர்தார் 7 உட்பட 114 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.12.2023 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 31.12.2023
விவரங்களுக்கு: careers.ntpc.co.in
சுரங்க நிறுவனத்தில் ஒப்பந்தப் பணி
Leave a comment