வேலூர், டிச.20 கடந்த 16.12.2023 அன்று மாலை 4 மணிக்கு வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா – நூல்கள் வெளியீட்டு விழா- நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு ஆகிய விழாக்கள் மாவட்ட தலைவர் வி.இ.சிவக் குமார் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநகர தலைவர் ந.சந்திரசேகரன் வரவேற் புரையாற்றினார். அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் மறைந்த அய்ம்பது ஆண்டில் கழகம் பெற்ற வெற்றி களையும், தமிழர் தலைவர் அவர் களின் ஓய்வறியா உழைப்பால் தமிழ்ச்சமூகம் பெற்ற பயன்களை விளக்கும் ஆசிரியர் அய் யாவின் உருக்கமிகு அறிக்கையினை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் வாசித்தபோது கரவொலி எழுப்பி தோழர்கள் வரவேற்றார்கள்.
நூல்கள், நாட்காட்டி, நாட் குறிப்பினை காப்பாளர் ப.கலை மணி வெளியிட காப்பாளர் வி.சட கோபன் மற்றும் மாநில பகுத் தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் புத்த கங்களை பெற்றுக் கொண்டனர்.
பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் நாட்காட்டி நாட்குறிப்பினையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கழக காப்பாளர் ச.ஈஸ்வரி, மாவட்ட மகளிரணி செயலாளர் சி.லதா, ஆற் காடு நகர தலைவர் கோ.விநாயகம், குடியாத் தம் நகர அமைப்பாளர் வி.மோகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் பெ.தனபால், ஆற்காடு பகுத்தறிவாளர் கழக தோழர் பெல் வெ.தங்கராசு, ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண் டார்கள்.
மகளிரணி ந.தேன்மொழி, பேர் ணாம்பட் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.சுப் பிரமணி, குடி யாத்தம் நகர தலைவர் சி.சாந்த குமார், மற்றும் தோழர்கள் நாள் காட்டி மற்றும் நாட்குறிப்புகளை பெற்றுக் கொண்டார்கள்.
பொன்னை பெரியார் ஆவின் பாலகம் துரை.வெற்றிச்செல்வன் கருத்துரையாற்றினார்
கழகப் பேச்சாளர் இரா.பெரி யார்செல்வன், தமிழர் தலைவர் தொண்டால் விளைந்த பயன் களை, சந்தித்த போர்க்களங்களை விளக்கி சிறப்புரையாற்றினார்.
விடுதலை சந்தாக்கள் வழங்கல்!
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மருத்துவர் பழ.ஜெகன்பாபு – 5 ஆண்டு சந்தாக்கள், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மா.அழகிரி தாசன் – 3 ஆண்டு சந்தாக்கள், மாவட்ட இளைஞரணி தலைவர் பொ.தயாளன் – 1 ஆண்டு சந்தா, மாவட்ட இளைஞரணி செயலாளர் இ.தமிழ் தரணி – 1 ஆண்டு சந்தா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.சீனிவாசன் – 1 ஆண்டு சந்தா, வேலூர் மாநகர செயலாளர் தி.க.சின்னதுரை – 1 ஆண்டு சந்தா, மாவட்ட அமைப்பாளர் நெ.கி.சுப்பிரமணி ஓராண்டு சந்தா மொத்தம் 13 சந் தாக்களை மூன்றாவது தவணை யாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரனிடம் வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி தலை வராக பொ.தயாளன், மாவட்ட இளைஞரணி செயலாளராக
இ.தமிழ்த்தரணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக மு.சீனி வாசன் ஆகியோர் புதிய பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டார் கள்.
திராவிடர் கழக , பகுத்தறிவாளர் கழக மாநில மாவட்ட புதிய பொறுப்பாளர்களுக்கு பய னாடை போர்த்தி பாராட்டு தெரி விக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப் பினர்கள் கு.இளங்கோவன், க.சிகா மணி, மாவட்ட பகுத் தறிவாளர் கழக அமைப்பாளர் வே. வினாயக மூர்த்தி, மாநகர பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆ.துரைசாமி, ஓவியர் தயாளன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, பொன்னை கே.சண்முகம், மற்றம் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் நன்றியுரையாற்றினார்.