‘விடுதலை’ விளம்பரப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய அருமைத் தோழர் திரு. பிரித்திவிராஜ் அவர்களின் திடீர் மறைவு செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அடக்கமாக கடமை உணர்ச் சியோடு பணியாற்றிய நமது தோழரின் மறைவால் சொல் லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் தோழர் பிரித்திவிராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘விடுதலை’க் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
ஆசிரியர்
‘விடுதலை’
சென்னை
18.12.2023