ஆசிரியர் விடையளிக்கிறார்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி 1: தமிழ்நாட்டில் நீங்கள் நெருங்கிப் பழகிய முதலமைச்சர்களில் பச்சைத் தமிழர் காமராசர் முதல் இப்போதுள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை உங்கள் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தந்தவர்கள் யார், யார்?

– எஸ்.நல்லபெருமாள், வடசேரி, நாகர்கோயில்

பதில் 1: உங்கள் கேள்விப்படி நான் பல முதலமைச்சர்களிடமும் நெருங்கிப் பழகியவன் அல்ல; அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் பழகியவன். மற்றபடி அவர்களை அறிந்தவன்; புரிந்தவன் – அவர்களது ஆட்சியின் சாதனைகளைப் பிரச்சாரம் செய்து பாராட்டியவன். ஞாயிறு மலரில் (‘தினத்தந்தி’) இதுபோன்ற கேள்விகளுக்குப் பதிலைத் தந்துள்ளேன்.

– – – – –

கேள்வி 2: இயற்கைச் சீற்றங்களில் இருந்து கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், கோயில்களில் உள்ள கற்சிலைகளுக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறாரா?

– செல்விபாபு, மதுரை.

பதில் 2: இயற்கைச் சீற்றங்களிலிருந்து கோயில்களைப் பாதுகாக்க ஹிந்து முன்னணி தலைவர், அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறாராம்! “தன்னைக் காப்பாற்ற முடியாத கடவுளா உன்னைக் காப்பாற்றப் போகிறார்” என்று நறுக்குக் கேள்வி கேட்பார் தந்தை பெரியார்!அது உண்மை என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார் ஹிந்து முன்னணி தலைவர். “கடவுளை மற; மனிதனை நினை” என்பதும் நிரூபணம் தானே! “கோயில் கடவுளை மற! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசை நினை!” – புதுமொழி என்பதுதானே இது?

– – – – –

கேள்வி 3: வேலியே பயிரை மேய்வதைப் போன்று, மதச்சார்பற்ற நாட்டில் அரசுப் பணியில் இருந்துகொண்டு குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய காவலர்கள் குற்ற நிகழ்வுகள் குறைய வேண்டி முருகன் கோயிலுக்குக் காவடி எடுத்தது சட்டப்படி தவறு அல்லவா?

– குமாரி, கன்னியாகுமரி.

பதில் 3: வெட்கப்பட வேண்டிய செய்தி. உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) போன்றவர்களிடம் இதுகுறித்து பகுத்தறிவாளர்களும், கழகமும் புகார் அளிக்க வேண்டும்; தேவையானால் வழக்கும் போட வேண்டும்.

– – – – –

கேள்வி 4: பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து 2022ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு – இது ஒரு வரலாற்றுப் பிழை என்று நீதிபதி ஒருவர் (7.12.2024) கூறியிருக்கிறாரே?

– க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

பதில் 4: இதுபற்றி ‘விடுதலை’ அறிக்கை (10.12.2024) காண்க!

– – – – –

கேள்வி 5: அண்ணல் அம்பேத்கரை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேலி செய்துள்ளாரே?

வே.சந்திரன், திருத்தணி

பதில் 5: அதன் பலனாக பி.ஜே.பி. வகையறாக்கள் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைப் பார்த்து திணறிப் போய் உள்ளனரே!

– – – – –

கேள்வி 6: “ஒரே நாடு – ஒரே தேர்தல்” என்பதில் ஒருமுறைதான் தேர்தல் என்பதாக முடிந்துவிடும் அபாயம் உள்ளதல்லவா?

– க.தமிழ்வேந்தன், மதுரை

பதில் 6: இது நடப்பதற்கு நிரம்ப சாத்தியம் உண்டே!

– – – – –

கேள்வி 7: அமெரிக்க மண்ணில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்த உத்தரப் பிரதேச மாநில இணையரை அவர்களது சொந்த ஊரில் குற்றவாளிகளாக நடத்திய அரசு அதிகாரிகளின் போக்கு குறித்து?

– த.முல்லை, தஞ்சை

பதில் 7: உ.பி. என்பது இப்போது ஒரு காவி பரிசோதனைக் கூடம் என்பது இதன் மூலமும் புரிகிறதே!

– – – – –

கேள்வி 8: சட்டங்களின் பெயர்களை எல்லாம் சமஸ்கிருத மயமாக்குவதில் சங்பரிவார் கூட்டம் மும்முரமாக ஈடுபட்டுள்ளதே?

– கல.சாக்கியமுனி, காஞ்சி

பதில் 8: அதற்குத்தானே இவ்வாட்சியினர் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை நிறைவேற்றி மகிழ்கிறார்கள்!!

– – – – –

கேள்வி 9: விவசாயிகளின் தொடர் போராட்டங்களைக் குறித்து ஒன்றிய அரசு சிறிதும் கவலைப்படாமல் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்கிறதே?

– அ.காளிதாசன், நுங்கம்பாக்கம்

பதில் 9: அதன் விளைவு பிறகு தெரியும்.

– – – – –

கேள்வி 10: சென்னை மாநகரில் கடந்த ஒரு வாரத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக அடுத்தடுத்து ஆறுக்கும் மேற்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை எப்படி எடுத்துக் கொள்வது?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்

பதில் 10: கடுமையான தண்டனை தந்து காவல்துறையையும் தூய்மைப்படுத்த வேண்டியது அரசின் முக்கிய பணியாக உள்ளது தற்போது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *