கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அரசு துறைகளில் 68 ஆயிரம் பேருக்கு வேலை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தனியார் நிறுவனங்களில் 5 லட்சம் பேருக்கு பணி
தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, செப். 21- தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 பேருக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 பேருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் நேரடி நியமனம், உள் ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப் புகளின் வாயிலாக 33,655 பேருக்கும் என மொத்தம் 68,039 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சுதந்திர நாள் விழா உரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 75 ஆயிரம் இளைஞர்களை பல்வேறு அரசுத் துறைகளில் பணி நியமனம் செய்ய ஏதுவாக சம்பந்தப்பட்ட அமைப் புகள், அரசுத் துறைகள் வாயிலாக ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திவரும் குரூப் 4 தேர்வைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு துறையும் தங்களது காலிப் பணியிடங்களை நேரடி யாகத் தெரிவித்து தேவையான பணியாளர்களை பெற்று வருகிறது.

தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப் படும் காலி பணியிடங்கள் மாறு தலுக்கு உட்பட்டது. கடந்த மூன்று முறை நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகளை ஒப்பிடும் போது காலிப் பணியிடங்கள் முறையே 9,351, 6,491 மற்றும் 7,301 என அறிவிக்கப்பட்டன.
தேர்வுகள் நிறைவு பெற்று பணி யிடங்கள் நிரப்பப்பப்படும் போது, முறையே 11,949, 9,684 மற்றும் 10,139 என அதிகரிக்கப்பட்டுள்ளன. நடப் பாண்டை பொறுத்தவரையில் 6,244 என அறிவிக்கப்பட்டிருந்த காலிப் பணியிடங்கள் தற்பொழுது 6,724 என அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை, பணியிடங்கள் நிரப் பப்படும் வரை மேலும் அதிகரிக்கும்.

இது மட்டுமல்லாமல், பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப் புகள் மற்றும் தேர்வாணையம் போன்ற அமைப்புகளின் வாயிலாக 2 ஆண்டுகளுக்குள் முதலமைச்சர் அறிவித்துள்ளபடி மேலும் 75ஆயிரம் இளைஞர்கள் அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.
அரசுத் துறைகளில் மட்டு மல்லாது, இந்த அரசுப் பொறுப் பேற்றதிலிருந்து தொழில் முன் னேற்றம் குறித்து எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகள் காரணமாக, தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், “நான் முதல்வன்” திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் முயற்சியால் 5,08,055 தமிழ்நாடு இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர்களின் திறன் மேம்பாட்டில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் “நான் முதல்வன்” திட்டத்தின் வாயிலாக பொறியியல், தொழில்நுட்பம், கலை, அறிவியல், பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் பயிலும் 27,73,847 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.படித்த, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்று தரும் பணியை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண