வலங்கைமான், செப் 13- கும்பகோணம் கழக மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 6-9-2025 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் “அய்யா நர்சரி” கோவிந்த குடியில் நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றிய கழக தலைவர் க.பவானி சங்கர் ஏற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி கூறினார். கோவிந்தகுடி ஜெயபால் முன்னிலை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய கழக செயலாளர் சி.ராமச்சந்திரன் அனைவரையும் .வரவேற்புரை கூறினார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் எம்.எஸ். விவேகானந்தன், ஆர். இந்திரஜித், சி .ராமச்சந்திரன், தெ. அசோக்ராஜ், ஆர். வரதராஜன், வி. மோகன், கோவி. பெரியார் கண்ணன், கோ.இறையன்பன், க. பவானி சங்கர்,தெ. உத்தமன் காமராஜ், வி. நாகராஜ், கே. கரிகாலன் மதகரம், ஆர்.ஜெயபால் கோவிந்தகுடி ஆகியோர் கலந்து கொண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 147 ஆவது ஆண்டு விழாவினை எப்படி கொண்டாடுவது என திட்டமிட்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள்.
அதன் பின் மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர்வி. மோகன் தனது கருத்துரையில் பாபநாசம் வர இருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வரவேற்க பாபநாசம் செல்ல வேண்டும் என்றும், பெரியார் உலகம் தொடர்பான செய்திகளைக்கூறி அதற்கு வலங்கைமான் ஒன்றியத்தில் வசூல் செய்ய வேண்டிய முறைகள் பற்றியும் கூறினார். தொடர்ந்து பெரியார் பிறந்த நாளில் வழக்கம்போல் ஒன்றியத்தில் உள்ள தோழர்கள் இல்லத்தில் கொடியேற்றுவது தொடர்பான திட்டங்களையும் அதற்கான பொறுப்பாளர்களையும் நியமிக்க வேண்டினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
22-2-2024 அன்று மறைந்த விவசாய அணித் தோழர் வலங்கை மான் வே.அய்யனான், 26.12.2024 மறைந்த ஒன்றிய தலைவர் நா. சந்திரசேகரன், .17.1.2025 இல் மறைந்த குடந்தை மாவட்ட காப்பாளர் வே கோவிந்தன், 21.7.2025 அன்று மறைந்த ஆர். ரங்கசாமி ஆகியோரின் மறைவுக்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டது.
தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒன்றியம் முழுதும் “இல்லம்தோறும் இயக்கக் கொடி” ஏற்றி இனிப்பு வழங்கி, பள்ளிகளில் குழந்தைகளுக்கும் ,அரசு அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது .
அக்டோபர் 4, 2025இல் செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவுவிழா மாநாட்டில் வலங்கை ஒன்றியத்தில் இருந்து அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானங்களை நிறைவேற்றுவதுடன் பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் தீர்மானிக்கப்பட்டது
பெரியார் உலகத்துக்கு அதிக அளவில் நிதி திரட்டுவதும், விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது என்று இந்த கூட்டம் தீர்மானித்தது.
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றி யங்கள் தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களும் பொதுக் கூட்டமும் நடத்துவதென தீர்மானிக் கப்படுகிறது
தீர்மானங்களை அசோக் ராஜ் வாசித்தார். தெ.அசோக்ராஜ் நன்றி கூறினார்.
