பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம்! ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கான்பெர்ரா, ஆக.13- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது, 2023 அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேல் தாக்குதலைத் துவங்கியது. போரை நிறுத்துமாறு பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இஸ்ரேல் – பாலஸ் தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்தாலும், இதுவரை பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்க வில்லை.

இந்தச் சூழலில் காசா மீதான போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்து வருகின்றன.

குறிப்பாக அய்ரோப் பிய நாடுகள் பலவும் கடந்த சில வாரங்களாக இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் நேற்று முன்தினம் (11.8.2025) கூறியுள்ளதாவது:

பாலஸ்தீனிய அதிகார சபையிடமிருந்து ஆஸ்திரேலியா பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாடு இருப்பதற்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும்.

பாலஸ்தீன அரசில், ஹமாஸ் அமைப்புக்கு எந்தப் பங்கும் இல்லை என்று உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், காசாவில் நடக்கும் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்கு கொண்டு வரவும், பாலஸ்தீன தனி நாடு என்ற முடிவே தீர்வாக இருக்கும்.

வரும் செப்டம்பரில் நடைபெறும், அய்.நா., பொதுச் சபையின் 80வது கூட்டத் தொடரில், பாலஸ் தீனத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *