‘திராவிட மாடல்’ ஆட்சியில் வளர்ச்சி நோக்கி தமிழ்நாடு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கிலாந்து ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஆக.12- வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கி லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 2030-ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.85 வட்சம் கோடி) என்ற அளவுக்கு உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அந்த இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான தொழில் முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு பகுதியாக கடந்த ஆண்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த வகை யில் அவர் இதுவரை 4 முறை வெளிநாட் டுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

2021-ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐக் கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்றார். அங்கு ரூ.6 ஆயிரத்து 100 கோடி அளவுக்கு தொழில் ஒப்பந்தங்களை அரசு சார்பில் மேற்கொண்டார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. 2023-ஆம் ஆண்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றபோது ரூ.1,342 கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இங்கிலாந்து, ஜெர்மனி

கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற முதல மைச்சர், ரூ.3 ஆயிரத்து 440 கோடிக்கு தொழில் ஒப்பந்தங்கள் மேற் கொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அமெரிக்காவுக்கு சென்றபோது ரூ.7 ஆயிரத்து 616 கோடிக்கு பல்வேறு தொழில் மேம்பாட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட் டன. அதன் மூலம் 11 ஆயிரத்து 516 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் 5-ஆவது முறையாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்ல அவர் திட்டமிட்டுள்ளதாக அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்தமுறை அவர் இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு செல்ல இருக்கிறார். இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் செப்டம்பர் தொடக்கத்திலேயோ அவர் வெளிநாட்டு பயணத்தை மேற் கொள்வார்.

கிங்ஸ் கல்லூரி

இந்த இருநாடுகளிலும் பல்வேறு தொழில் அதிபர்கள், முதலீட்டாளர் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேச இருக்கிறார். அப் போது தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருமாறு, அவர்களுக்கு அழைப்பு விடுப்பார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

இந்த சுற்றுப்பயணம் 10 நாட்கள் வரை நீடிக்கும் என்று தெரிகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் முதலமைச்சரின் இந்த வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *