பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஆக.4 பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

ஒடிசாவின் புரி மாவட்டத் தில் அடையாளம் தெரியாத மூன்று நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, டில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த குற்றங்களை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மகளிா் அணித் தலைவரான அல்கா லாம்பா கூறியதாவது: சிறுமி தீவைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க ஒடிசா மாநில அரசு தவறிவிட்டது. சிறுமி உயிரிழந்த பின் இந்தக் குற்றத்தில் யாரும் ஈடுபடவில்லை என காவல்துறையினர் கூறுகின்றனா்.

இதற்கு முன்னா் ஃபகீா் மோகன் கல்லூரியில் பயின்ற மாணவி பாலியல் துன்புறுத் தலுக்கு உள்ளாகி தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சத்தீஸ்கரில் இரண்டு கன்னியாஸ்திரீகளை காவல்துறையினர் கைது செய்தனா்.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டுமானால் பெண்கள் இரவில் வெளியே வரக் கூடாது என காவல்துறையினர் விளம்பரப் பதாகைகள் வைத்துள் ளனா்.

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது. இதுபோன்ற குற்றங்கள் இனியும் தொடரக் கூடாது. பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு விரைவு நீதிமன்றங்கள் மூலம் அந்த வழக்குகளுக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *