கோவை, ஏப்.7- கோவை ஒத்தக்கடை வெள்ளாளர் தெருவில் கழக மகளிரணி தோழர் பாக்கியம்-முத்துச்சாமி ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட பாக்கியம் இல்லத் திறப்பு விழா 06-04-2025 காலை 11:30 மணியளவில் நடைபெற்றது.
கோவை மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடு அனைவரையும் வரவேற்று பேசினார். கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர் தலைமை ஏற்று உரையாற்றினார். பெரியார் பெருந்தொண்டர் பழ.அன்பரசு, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தலைவர் தி.க.செந்தில்நாதன், மாநகர செயலாளர் க.வீரமணி, கவிதாதருமன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பாக்கியம் இல்லத்தை திறந்து வைத்து தந்தை பெரியாரின் அமைதிப் புரட்சி, பண்பாட்டு மீட்டுருவாக்க புரட்சி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதை விளக்க உரையாற்றினார்
பகுதி கழகத் தலைவர்கள் குமரேசன், ஆட்டோ சக்தி, ராஜசேகர், பகுதி கழக செயலாளர் திராவிட மணி, எட்டிமடை மருதமுத்து, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் ராஜேஸ்வரி,
ரா.சி.பிரபாகரன், தேவிகா, முத்து கணேஷ், குரு, ஆவின் சுப்பையா, வெற்றி, பெயிண்டர் குமார், மேட்டுப் பாளையம் ரங்கசாமி, பிரபாகரன் வெங்கிடு உள்ளிட்ட கழகத் தோழர்கள் உறவினர்கள் நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வருகை தந்த அனைவருக்கும் தோழர் பாக்கியம் நன்றி கூறினார்.