வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆராய்ச்சி நிறுவனம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆராய்ச்சி நிறுவனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 15- வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப் படும். சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப் படுகிறது என்று அமைச்சர் கே.டி.பச்சை மால் தெரிவித்தார்.

சட்டசபையில் வனத் துறைமானிய கோரிக்கை மீதான விவா தத்திற்கு பதில் அளித்து அமைச்சர் கே.டி.பச்சை மால் கூறியதாவது:-

வன உயிரினங்களி னால் ஏற்படும் பாதிப்பு களைத்தடுக்கும் பொருட்டு, அகழிகள் வெட்டுதல், நீர்தேக்க குட்டைகள் அமைத்தல், தீவனப் பயிர்களை பயிர் செய்தல், வேட்டை தடுப்புபணிகள் போன் றவை இந்த ஆண்டு ரூ.10 கோடியில் மேற்கொள் ளப்படும்.

சத்தியமங்கலம் வன உயிரின சரணாலயத்தின் ஒரு பகுதியாக உள்ள புலிகள் வாழ்விடத்தி னையும், அதனை ஒட்டி யுள்ள பகுதிகளையும் சீரிய முறையில் பாது காத்திட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 1,40,924 எக்டேர் பரப் பளவில் மாநிலத்தின் 4ஆவது புலிகள் காப்ப கமாக ஏற்படுத்தப்படும்.

ரூ.8.25 கோடியில் ஆனைமலை, முது மலை, களக்காடு முண் டந்துறை புலிகள் காப் பகம் மற்றும் நீலகிரி, கன்னியாகுமரி மாவட் டங்கள் ஆகிய 5 இடங் களில் கண்காணிக்க இயலாத நிலையில் உள்ள உள்ளார்ந்த வனப்பகுதிகளில் அனல் நிழற்படக் கருவிகள் நிறுவி ஒருங்கிணைந்த கண்காணிப்பு நட வடிக்கை மேற்கொள் ளப்படும்.

வண்டலூர் உயிரி யல் பூங்காவில் வன உயிரின ஆராய்ச்சி நிறு வனம் ரூ.34.24 கோடியில் ஏற்படுத்தப்படும். 3 ஆண்டு காலத்தில் மத் திய சுற்றுச்சூழல் மற் றும் வன அமைச்சகத் தின் உதவியுடன் மொத் தமாக ரூ.74.37 கோடி யில் இந்நிறுவனம் மேம் படுத்தப்படும். இதில் இயற்கைச் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு மய்யம், வனஉயிரின தடயஅறிவியல் ஆராய்ச்சி கூடம், தாவ ரங்கள் மற்றும் மாமிசம் உண்ணும் விலங்குகள் பற்றிய பெரிய அள விலான கள ஆராய்ச்சி மய்யங்கள் அமைக்கப் படவுள்ளன.

இந்த ஆண்டு 1000 வருவாய் கிராமங்களில் 1 கோடி மரக்கன்றுகள் ரூ.15.16 கோடியில் நடப் படும். தானே புயலால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வனத் துறையினரால் ஆறு, வாய்க்கால் கரைகளில் ஏற்படுத்தப்பட்ட மரத் தோட்டங்கள் பாதிக்கப் பட்டன. அங்கு இந்த ஆண்டு ரூ.10.90 கோடி யில் தேக்கு, சவுக்கு, தைல மர வகைகள் நடவு செய் யப்படும்.

வனம்மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் சேகரிப்பு பணிகள் நபார்டு வங்கி ஒப்புதலுடன் ரூ.100 கோடியில் செயல்படுத் தப்படும். வன மேம்பாடு மற்றும் வன வளங்களை பாதுகாக்கும் திட்டம் ரூ.35.62 கோடியில் செய லாக்கப்படும்.

வனம் அல்லாத சாலைகள் போன்ற அரசு நிலங்களில் உள்ள மரங்களை பாதுகாத் திட உரிய நடவடிக்கை எடுக்க மரங்கள் பாது காப்பு சட்டம் இயற்ற முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள் ளார். மரங்களை வெட் டிக்கொள்ள மற்றும் அதற்கு ஈடாக 10 மடங்கு புதிய மரங் களை நடுவதை உறுதி செய்ய மரக்குழுமம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் தேயிலைதொழிற் சாலைகள்ரூ.4.04 கோடியில் நவீனமய மாக்கப்படும். அரசு ரப்பர் கழகத்தின் 355 எக்டேர் கொண்ட பழைய ரப்பர் தோட் டங்களை வெட்டி புதிய உயர்ரக ரப்பர் கன்றுகள் மறுநடவு செய்யப்படும்.

-இவ்வாறு அவர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner