சுற்றுலா மேலாண்மை மார்க் குழுமம் ஒப்பந்தம்

சுற்றுலா மேலாண்மை மார்க் குழுமம் ஒப்பந்தம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அடிப்படை கட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மார்க் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த லிம்கோக்விங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது.

இதன்படி, மலேசியாவின் லிம்மோக்லிங் பல்கலைக்கழகம், மார்க் குடியிருப்பு கல்வி வளாகத்தில் 1 லட்சம் சதுர அடியில் அமைக்க உள்ளது.

இப்புதிய கல்வி வளாகத்தில், அனிமேஷன், கிரியேட்டிவ், மல்டிமீடியா, விளம்பரம், பேஷன் மற்றும் ஹேர் டிசைனிங், உள்வடிவமைப்பு மற்றும் சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட பல வகையான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதில், மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையிலும், சிறப்பான வேலை வாய்ப்பின் மூலம் அதிக வருமானத்தை ஈட்டும் வகையிலும், பன்னாட்டு தரத்திலான பாடத்திட்டங்கள் பயிற்சிவிக்கப்படும் என, மார்க் குழுமத்தின் தலைவர் ஜி.ஆர்.கே. ரெட்டி தெரிவித்துள்ளார்.

புதிய வடிவமைப்பில் ஆடி ஏ4 கார் அறிமுகம்

சிறந்த வடிவமைப்பு, பயணிகள் வசதியாக அமர்ந்து கொள்ளும் வகையில் அதிக இடவசதி, மேம்படுத்தி வடிவமைக்கப்பட்ட இன்ஜின் மற்றும் பம்பர்கள் ஆகிய சிறப்பம்சங்களை கொண்ட புதிய வடிவிலான ஆடி ஏ4 என்ற காரை ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை தவிர, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில், கிரில்கள் மற்றும் முகப்பு விளக்குகள் உள்ளிட்டவை திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்நிறுவனம், வாடிக்கையாளர் நலனை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான நிதி சேவை, காப்பீடு மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் அகியவற்றையும் வழங்குகிறது என இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner