இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் `சிப்'
முன்பு அடுத்து Page:

குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

  குவைத்தில் நாடாளுமன்றத் தேர்தல்

குவைத், நவ.27 அரபு வளை குடா நாடான குவைத்தில் சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அய்ம்பது இடங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 300 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 14 பேர் மட்டுமே பெண்கள். முழு மையான ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், முக்கிய அதி காரங்கள் அல்-ஸபா அரச குடும் பத்திடம் இருக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. குவைத் நாட்டில்....... மேலும்

31 டிசம்பர் 2016 16:00:04

கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி

கோஸ்ட்டரிக்காவை தாக்கிய ஓட்டோ புயலுக்கு 9 பேர் பலி

சான்ஜோஸ் நவ.27 நிகாரா குவா மற்றும் கோஸ்ட்டரிக் காவை தாக்கிய ஓட்டோ புய லுக்கு 9 பேர் பலியானதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து தவிப்பதா கவும் தெரியவந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதி யை ஒட்டியுள்ள மத்திய அமெரிக்க கண்டத்தில் அமைந் துள்ள நிகாராகுவா மற்றும் கோஸ்ட்டரிக்காவை நேற்று அதிவேக ஓட்டோ புயல் தாக் கியது, இரண்டாம் எண் எச்சரிக் கையுடன் அடையாளம் காணப் பட்டு பசிபிக் பெருங்கடல் பகு தியை அச்சுறுத்திவந்த....... மேலும்

31 டிசம்பர் 2016 16:00:04

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல்

‘ரஷ்ய ராணுவ விமான விபத்துக்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல’ : விசாரணைக்குழு தலைவர் தகவல் மாஸ்கோ, டிச.30 அண்மையில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்கு உள்ளான தற்கு குண்டு வெடிப்பு காரணம் அல்ல என்று அது குறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழுவின் தலைவர் வியாழக் கிழமை தெரிவித்தார். ரஷ்ய விமானப் படை பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும் விபத்து விசாரணைக் குழுவின் தலை வருமான செர்கேய் பைனடோவ் செய்தி யாளர்களிடம்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:45:03

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு

வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் அதிபர் ஒபாமா உத்தரவு வாஷிங்டன், டிச.30 ரஷ்ய நாட்டை சேர்ந்த தூதரக அதிகாரிகள் 35 பேரை நீக்கம் செய்த தோடு, 72 மணி நேரத் தில் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் கடந்த 8ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பாப்புலர் ஓட்டு....... மேலும்

30 டிசம்பர் 2016 15:42:03

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்

சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்   சிரியா, டிச.30 சிரியா அரசு - கிளர்ச்சியாளர்கள் இடையே வியாழக்கிழமை போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக ராணுவம் தெரிவித்தது. நாடு முழுவதிலும் போர் நிறுத்தம் வியாழக்கிழமை நள் ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று சிரியா ராணுவம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியா அரசுத் தொலைக்காட்சி இது குறித்த செய்தியை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட் டதாவது: சிரியாவில் நடைபெற்று வரும் அனைத்துத்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:41:03

இதயத் துடிப்பைக் கண்காணிக்கும் `சிப்'

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனிதர்களின் இதயத் துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய ஒரு `மைக் ரோசிப்' பை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக் கின்றனர்.

ஓர் அரிசி அளவே உள்ள இந்த `சிப்', ஒரு நுண்ணிய குழாய் வழியாக இதயத்துக்குள் செலுத்தப்படும். அங்கிருந்தபடியே கண்காணிப்பு வேலையே இது தொடரும்.

இதயத்தின் செயல்பாட்டை அளவிடுவதன் மூலம் செயல்படும் வகையில் இந்த `சிப்' வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு நொடிக்கு 200 முறை ரத்த அழுத்தத்தை அளவிடும். அதன்மூலம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு போன்றவற்றை இந்த `சிப்' ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துக் கூறிவிடும். இந்த `சிப்' பொருத்தப்பட்டவரின் மார்பு அருகில் ஒரு மருத்துவர் தனது கையடக்கமான `ரிசீவரை' வைத்தால் போதும். தான் கண்டுபிடித்தவற்றை அந்த ரிசீவருக்கு `சிப்' அனுப்பிவிடும்.

இதயத்தைக் கண்காணிப்பதற்கான தற்போதைய தொழில்நுட்பத்தின் குறைபாடு, இதயத்தில் என்ன நடக்கிறது என்று குறுகிய காலத்துக்கு மட்டுமே அது தெரிவிக்கிறது. நாள் கணக்கில், வாரக் கணக்கில் இதயத்தைக் கண்காணிப்பதில்லை. அந்தக் குறையை இந்த `சிப்' போக்கிவிடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், இதயத்தில் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்து, அறுவை சிகிச்சை மூலம் இதயத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து பாதிப்பைத் தவிர்க்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner