சீர்திருத்த அமலில் தேக்க நிலை இல்லை: பிரணாப் முகர்ஜி உறுதி
முன்பு அடுத்து Page:

அய்.எஸ்.தீவிரவாதிகளின் தலைகளைத் துண்டித்து சமைத்த பெண்

  அய்.எஸ்.தீவிரவாதிகளின் தலைகளைத் துண்டித்து சமைத்த பெண்

பாக்தாத், அக். 2- பழிக்கு பழி வாங்க அய்.எஸ். தீவிரவாதிகள் தலைகளை துண்டித்து ஒரு பெண் சமைத்தார். ஈராக்கை சேர்ந்தவர் வாஹிதா முகமது என்கிற உம்ஹனாடி. இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் பல்வேறு தீவிரவாத இயக்கங்களில் இருந்தார். சமீபத்தில் அய்.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர் அய்.எஸ். தீவிரவாதிகளை கொன்று தலை துண்டித்து அவர்களின் தலையை துண்டு துண்டாக வெட்டி சமைத்தார். அக்காட்சியை நிழற்படங் கள் மற்றும் வீடியோ....... மேலும்

03 அக்டோபர் 2016 11:30:11

இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டனம்

 இந்தியாவுக்கு அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டனம்

வாஷிங்டன், அக். 2- இந்தியாவை அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குவோம் என்று வெளிப் படையாக மிரட்டல் விடுத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. உரி தாக்குதலுக்கு பதிலடி யாக, பாகிஸ்தானில் அமைந் திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் ஆத்திரமடைந் துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அண்மையில் ஒரு செய்தித் தொலைக்காட் சிக்கு....... மேலும்

03 அக்டோபர் 2016 11:21:11

நியூ ஜெர்சி ரயில் விபத்து: ஒருவர் பலி; 114 பேர் காயம்

  நியூ ஜெர்சி ரயில் விபத்து: ஒருவர் பலி; 114 பேர் காயம்

நியூஜெர்சி, அக். 1--- அமெரிக்கா வின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த ரயில் விபத்தில் ஒருவர் உயி ரிழந்தார். மேலும், 114 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் முன்பு 3 பேர் உயிரிழந்ததாக தெரிவிக் கப்பட்ட நிலையில், தற்போது, ஒருவர் மட்டுமே பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து நியூஜெர்சி ஆளு நர் கிறிஸ் கிறிஸ்டி கூறியதாவது: ஹோபோகென் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை மிக வேகமாக வந்த பயணிகள் ரயில் கட்டுப்பாட்டை....... மேலும்

01 அக்டோபர் 2016 17:06:05

அணு ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்: ஹிலாரி பேச்சு

அணு ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து தற்கொலைத் தாக்குதல் அச்சுறுத்தல்: ஹிலாரி பேச்சு

வாஷிங்டன், அக். 1- பாகிஸ் தானில் உள்ள அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கையில் சிக்கி அவற்றைக் கொண்டு தற் கொலைத் தாக்குதல் நிகழும் அச்சுறுத்தல் உள்ளதாக அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கூறிய கருத்து வெளி யாகி பரபரப்பு ஏற்பட்டது. ஜனநாயகக் கட்சியின் முக் கிய ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அவர் அவ்வாறு தெரிவித்தார் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. அந்தக் கூட்டத் தில் ஹிலாரி....... மேலும்

01 அக்டோபர் 2016 17:06:05

தென் சீனக் கடல் விவகாரம்: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

 தென் சீனக் கடல் விவகாரம்: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், செப்.30 தென் சீனக் கடல் விவகாரத்தில், நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண் டாடி வருகின்றன. மேலும் இப் பகுதியின் சில பகுதிகள் தங்க ளுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன. இந்த நிலையில், தென்....... மேலும்

30 செப்டம்பர் 2016 23:41:11

சீர்திருத்த அமலில் தேக்க நிலை இல்லை: பிரணாப் முகர்ஜி உறுதி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், ஏப். 24- பொருளாதார சீர்திருத் தங்களை மேற்கொள்வ தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தேக்க நிலையை எட்டிவிட வில்லை என்று நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார். அரசின் பொருளாதார ஆலோ சகர் கவுசிக் பாசு தெரி வித்த சில கருத்துகளால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இனி அரசு சீர்திருத் தங்களை மேற்கொள் ளாது, 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் எதுவும் நடக் கும்'' என்ற வகையில் பாசு கருத்து தெரிவித் திருந்தார். அதை முகர்ஜி உதாரணங்களுடன் மறுத்தார். பொருளா தாரச் சீர்திருத்தங்களை அமல் செய்வதில் தேக் கமோ, தயக்கமோ இல்லை. கவுசிக் பாசு சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. சமீபத்தில் கூட முக்கியமான பொரு ளாதார முடிவுகளை அரசு எடுத்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. புதிய ஆலை உற்பத் திக் கொள்கையை (மேனு பாக்சரிங் பாலிசி) அரசு வகுத்துள்ளது. அது இப் போது அமலுக்கும் வந் திருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புக்குத் தேவைப்படும் நிதியைப் பெற கடன் பத்திரங்கள் மூலம் நிதியை ஏற்படுத் துவோம் என்று கூறி யிருந்தோம்.

அந்த நிதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். தொழில், வணிகத் தேவைகளுக்காக வங்கி களை எளிதாக அணுகிக் கடன் பெறும் கொள் கைகளை உருவாக்குவோம் என்று கூறியிருந்தோம், அவற்றை இப்போது அமல் செய்துள்ளோம். இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் நடந்த நிர் வாகிகள் கூட்டத்தில் வட்டி வீதத்தை அரை சதவீதம் குறைத்து புதிய உத்வேகத்தை அளித்திருக் கிறது. இவையெல்லாம் சீர்திருத்த நடவடிக்கை கள் இல்லையா? நாட் டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தைக் கடந்த ஆண் டைவிட அதிகரிக்க வேண் டும், பணவீக்க விகிதத் தைக் கட்டுப்படுத்த வேண் டும் என்ற இரட்டை நோக்கில் புதிய முடிவு கள் எடுக்கப்பட்டுள்ளன. பணவீக்க விகிதம் 6 முதல் 7 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

நாட்டின் ஒட்டுமொத் தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் உயர்த்துவ தற்கு இலக்கு நிர்ணயித் திருக்கிறோம். மத்திய அரசின் வரவுக்கும் செல வுக்கும் உள்ள இடை வெளியைக் குறைக்க வேண்டும் என்று உணர்ந் திருக்கிறோம். வரவைப் பெருக்க வும் செலவைக் குறைக் கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின் றன.

வேளாண் துறையில் அதிகம் தேவைப்படும் உணவு தானியங்களை யும் எண்ணெய் வித்து களையும் பருப்பு வகை களையும் அதிகப் பரப் பளவில் சாகுபடி செய்ய ஊக்குவிப்புகளை அறி வித்துள்ளோம். சில பண்டங்களின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோம். சிலவற்றை தேவைக் கேற்ப இறக்குமதி செய் யவும் அனுமதி வழங்கி யிருக்கிறோம். விவசாயி களுக்கு இடு பொருள் கள், விதை, உரம் போன் றவை உடனுக்குடன் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வழிகாட்டு நெறிகளை உருவாக்கி யிருக்கிறோம். வங்கிகள் தரும் கடன் மீதான வட் டியை கடந்த 3 ஆண்டு களாக சிறிதுசிறிதாக உயர்த்தி, பண விநியோகம் கட்டுப்படுத்தினோம். இப்போது தொழில், வர்த்தகத்துறை நட வடிக்கைகளுக்குப் பணம் தேவைப்படுகிறது என்பதால் வட்டி வீதத்தையே அரை சதவீதம் குறைத்திருக்கிறோம்.

இவையெல்லாம் பொரு ளாதார சீர்திருத்த நட வடிக்கைகள்தானே? சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத் தின் விலை 2 வாரங் களுக்கு ஒருமுறை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது; உலக அளவில் வளரும் நாடுகளுக்கு இது பெரிய பிரச்சினையாக இருக் கிறது. வளர்ந்த நாடுகளுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. காரணம் வள ரும் நாடுகளில்தான் பெட் ரோலியப் பண்டங்களுக் கான தேவை அதிகமா கிக் கொண்டே வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தென் கொரிய நிதியமைச்சரும் என் னைச் சந்தித்தபோது ஒப் புக்கொண்டார். இது தொடர்பாக வளரும் நாடுகள் ஒன்றுகூடிப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார் முகர்ஜி.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner