வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில்
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.28 வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு தகுதி யானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் செயல் பட்டு வரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அலு வலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன.

இவை பொது முன்னுரிமை, தாழ்த்தப்பட்ட வகுப்பு அருந்த தியர் முன்னுரிமை (பெண்) ஆதரவற்ற விதவை என இன சுழற்சி முறையில் நேர்காணல் மூலம் நிரப்பட உள்ளன.

இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், வயது 18 முதல் 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியுடையோர் “”மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலு வலகம், ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை’’ என்ற முக வரியில் அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்று நவ.18-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண் டுள்ளார்.


இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner