வேலைவாய்ப்புச் செய்திகள்

வேலையில்லாத இளைஞர்கள்
சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை, டிச.20 படித்து வேலையில்லாத இளை ஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

படித்து, வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, பொருளா தார முன்னேற்றம் அளிக்கும் வகையில் வேலையில்லா இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப் படுகிறது.

இந்தத் திட்டத்தின் 2016- - - 2017-ஆம் ஆண்டு இலக்காக 183 பேருக்கு மானியமாக ரூ.91.67 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட் டத் தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  விண்ணப்பதாரர்கள் 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவராகவும், பொதுப் பிரிவினர் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் குறைந்த பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண் ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உற்பத்தித் தொழிலுக்கு ரூ.10 லட்சம், சேவைத் தொழிலுக்கு ரூ.3 லட்சம், வியாபாரத்துக்கு ரூ.ஒரு லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

திட்ட மதிப்பில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். உற்பத்தியினத்துக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

எனவே, தகுதியான விண் ணப்பதாரர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மய்யம், மாவட்ட ஆட்சியரின் பெருந் திட்ட வளாகம், திருவண்ணா மலை 606604 என்ற முகவரியில் நேரில் சென்று தேவையான விவ ரங்களைப் பெற்று விண்ணப்பிக்க லாம்.
மேலும், 9444650082, 7200545219 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில்
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.28 வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு தகுதி யானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் செயல் பட்டு வரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் அலு வலக உதவியாளர் காலிப் பணியிடங்கள் உள்ளன.

இவை பொது முன்னுரிமை, தாழ்த்தப்பட்ட வகுப்பு அருந்த தியர் முன்னுரிமை (பெண்) ஆதரவற்ற விதவை என இன சுழற்சி முறையில் நேர்காணல் மூலம் நிரப்பட உள்ளன.

இந்தப் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், வயது 18 முதல் 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினருக்கு 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தகுதியுடையோர் “”மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலு வலகம், ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை’’ என்ற முக வரியில் அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்று நவ.18-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி கேட்டுக் கொண் டுள்ளார்.


தமிழ்நாடு ராணிப் பேட்டையில் செயல் பட்டு வரும்  Bharat Heavy Electricals Limited -ல் பொறியியல் டிரெய்னி பணிக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன.
விளம்பர எண்:03/2015
மொத்த காலியிடங்கள்: 200
பணி: Engineer Trainee
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
மெக்கானிக்கல் - 115,  எலக்ட்ரிக்கல் - 60, எலக்ட்ரானிக்ஸ் - 15, மெட்டாலர்ஜி - 10 சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்கள் 29க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெட்டலார்ஜி பிரவுகளில் இளங்கலை அல்லது ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கட்டணத்தை :  http://careers.bhel.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்லானை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:GATE-2016
தகுதித்தேர்வு மற்றும்  நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://careers.bhel.in
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Sr.DGM (HRM), Bharat Heavy Electricals Limited, Boiler Auxiliaries Plant, Ranipet - 632401
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.02.2016
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 08.02.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://careers.bhel.in
என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மத்திய அரசுப்பணி தேர்வு:  விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசுப்பணிக்கு ஆள்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வுக்கு விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மத்திய பணியாளர் தேர்வாணையம்-பெங்களூரு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக மே 8ஆம் தேதி ஒருங்கிணைந்த பட்டநிலை தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய தலைமைச்செயலக சேவையில் உதவி பிரிவு அதிகாரி; சிவிசி, அய்.பி, ரயில்வே, வெளியுறவு, ஆயுதப்படை தலைமையகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உதவியாளர்; வருமானவரித்துறையில் ஆய்வாளர், வரி உதவியாளர்; மத்திய கலால்துறையில் ஆய்வாளர்; மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஆய்வாளர்; அமலாக்க இயக்குநரகத்தில் உதவி அமலாக்க அதிகாரி; சிபிஅய் மற்றும் என்ஐஏ ஆகியவற்றில் உதவி ஆய்வாளர்; அஞ்சல்துறையில் அஞ்சல் ஆய்வாளர்; மத்திய கணக்கு கட்டுப் பாட்டாளர் அலுவலகத்தில் கோட்ட கணக்காளர், கணக்காளர், இளநிலை கணக்காளர், பட்டயக்கணக்காளர்; புள்ளியியல்துறை அலுவலகத்தில் புள்ளியியல் ஆய்வாளர்; பதிவுத்துறையில் தொகுப்பாளர்; பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் முதுநிலை தலைமைச்செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. 2016 ஆக.1 ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை : http://ssconline2.gov.in, http://sscregistration.nic.in
ஆகிய இணையதளங்களில் செலுத்தலாம். இப்பணியிடங்களுக்கு சராசரியாக ரூ.38 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

பெங்களூரு போன்ற நகரங்களில் வேலைசெய்ய வாய்ப்பு கிடைத்தால் ரூ.4500 கூடுதலாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய சட்ட ஆணையத்தில்  காலிப் பணியிடங்கள்

தேசிய சட்ட ஆணையத்தில் காலியாக உள்ள 109 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடி மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: காலிபணியிடஙள் விவரம்

பணி:   Deputy Registrar - 09

பணி:  Assistant Registrar - 07
பணி:   Court Officer - 13
பணி:   Private Secretary - 33
பணி:  Accounts Officer - 02
பணி:  Senior Account - 13
பணி: Assistant - 13
பணி:  Steno Grade II/PA - 05
பணி:  ALIO - 01
பணி:  Record Assistant - 08
பணி: UDC - 03

விண்ணப்பிக்கும் முறை:  
www.clb.gov.in என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அட்டெஸ்ட் பெறப்பட்ட தேவையானை சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.03.2016

ஊர்க்காவல்படை மகளிர் பிரிவில்  பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்ட ஊர்க் காவல்படை பெண் கள் படைபிரிவில் காலியாக உள்ள ஊர்க்காவல் பத விக்கு தகுதியுள்ள பெண்கள் விண் ணப்பிக்கலாம். 18 முதல் 50 வயதுக் குள்பட்ட 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், நல்ல நடத்தையும், உடற்திறனும் கொண்டவராக இருக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இந்த தகுதியுள்ள பெண்கள் ஈரோடு மாவட்ட ஊர்க்காவல் படை பெண்கள் படைபிரிவில் பணியாற்ற தங்களை பற்றிய முழு விபரங்களை பாஸ்போர்ட் அளவு நிழற்படத்துடன் விண் ணப்பிக்கலாம்.

இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை மண்டல தளபதி, ஊர்க்காவல்படை, ஈரோடு மாவட்டம், ஈரோடு என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும் தொடர்பான விபரங்களுக்கு ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுக மாவட்ட ஊர்க் காவல்படை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விண்வெளி தொலையுணர்வு  மய்யத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி

அய்தராபாத்தில் செயல்பட்டு வரும் விண் வெளி தொலையுணர்வு மய்யத்தில் அளிக்கப் படவுள்ள அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: : National Remote Sensing Centre
இடம்: அய்தராபாத்

பணி: 1 ஆண்டு அப்ரண்டிஸ் பயிற்சி
காலியிடங்கள்: 42

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப் பட்ட பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ அல்லது பி.இ, பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண் டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nrsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

கூட்டுறவு வங்கியில் கிளார்க், அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மும்பையில் உள்ள எஸ்விசி கூட்டுறவு வங்கியில் நிரப்பப்பட உள்ள 104 கிளார்க், அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:   Customer Service Officer (Junior Management Grade) - 24

வயதுவரம்பு: 31.03.2016 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதெரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Customer Service Representative (Clerical Grade) - 80

வயதுவரம்பு: 31.03.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 45 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  svcbank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள்  மத்திய ரயில்வேயில் கான்ஸ்டபிளாக வாய்ப்பு

செகந்திராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2030 பெண் கான்ஸ்டபிள் பணிக்கு தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பெண் கான்ஸ்டபிள். மொத்த காலியிடங்கள்: 2030.

அ. ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force): 1827 இடங்கள் (எஸ்சி - 264, எஸ்டி - 145, ஒபிசி - 614, பொது - 804).

ஆ. ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை (Railway Special Protection Force): 203 இடங்கள் (எஸ்சி - 23, எஸ்டி - 33, ஒபிசி - 52, பொது - 95).

சம்பளம்: ரூ.5,200 - 20,200. வயது வரம்பு: 1.7.2016 தேதியின் படி 18 முதல் 25க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், விதவைகள், ரத்து பெற்ற பெண்கள் பொதுப் பிரிவினர் எனில் 2 வருடங்களும், ஒபிசியினர் எனில் 5 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியி னர் எனில் 7 வருடங்களும் சலுகை வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. உடற் தகுதி:

உயரம் - குறைந்த பட்சம் 157 செ.மீ., எஸ்சி., எஸ்டி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு 152 செ.மீ போதுமானது.

உடற் திறன் தகுதி: 1.800 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 40 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும். 12 அடி நீளம் தாண்ட வேண்டும் (இரு வாய்ப்புகள் வழங்கப்படும்). 3 அடி உயரம் தாண்ட வேண்டும் (இரு வாய்ப்புகள் வழங்கப்படும்).

ராணுவத் தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்களுக்கு உடற் தகுதி திறன் நடத்தப்பட மாட்டாது. எழுத்துத் தேர்வு, உடற் தகுதி, உடற் திறன் தகுதி, சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் பயிற்சி அளிக்கப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் நிரந்தரமாக பணி நியமனம் செய்யப்படுவர். பயிற்சியின் போது மாதம் ரூ.5,200 மற்றும் இதர ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்.

எழுத்துத் தேர்வில் மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். 90 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். பொது அறிவு - 50 கேள்விகள், அரித்மெட்டிக் - 35 கேள்விகள், பொது நுண்ணறிவு மற்றும் ரீசனிங் - 35 கேள்விகள். தேர்வு 10ம் வகுப்பு தரத்தில் இருக்கும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மூன்று தவறான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். கேள்வித் தாள் ஆங்கிலம், இந்தி மற்றும் சம்பந்தப்பட்ட மாநில மொழிகளில் அச்சிடப்பட்டிருக்கும். தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழில் தேர்வு எழுதலாம்.

என்சிசி - பி சான்றிதழ் பெற்றவர்களுக்கு ஒரு மதிப்பெண், என்சிசி - சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு 2 மதிப்பெண்கள், பல்கலைக் கழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு ஒரு மதிப்பெண், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு 2 மதிப்பெண், தேசிய அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு - 3 மதிப்பெண்கள், 165 செ.மீ.க்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

www.scr.indianrailways.gov.in அல்லது www.rpfonlinereg.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 1.3.2016.


மத்திய அரசின்கீழ் ஒடிசாவில் செயல்பட்டு வரும் National Aluminium Company Limited  -ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2, டிப்ளமே முடித்த இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: M&R/01/2015
பணி: Junior Foreman (Civil) (SO)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.14,600 - 36,500
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  Mining Mate (TO)
காலியிடங்கள்: 10 (ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்)  
சம்பளம்: மாதம் ரூ.11,700 - 27,500 வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன்   Mining Mate  மற்றும்  First Aid சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை   National Aluminium Company Limited, Alumina Refinery
என்ற பெயரில் -763008, Damanjodi-763008, Odisha,-வில் மாற்றத்தக்க வகையில் டி,டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.nalcoindia.com
என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nalcoindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Banner
Banner