சிண்டிகேட் வங்கியில் கிளார்க் பணிவாய்ப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1925இல் உடுப்பியில் சிண்டிகேட் வங்கி நிறுவப்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள நெசவாளர்களின் சேமிப்பை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த வங்கி பின்னர் தேசியமயமாக்கப்பட்டது. தற்போது பொதுத் துறையில் இயங்கி வரும் சிண்டிகேட் வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளன. இந்த வங்கியில் உள்ள 1000 கிளரிக்கல் காலி இடங்களை மாநில வாரியாக நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள் என்ன: சிண்டிகேட் வங்கியின் கிளரிக்கல் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அய்.பீ.பி.எஸ்., நடத்திய பொது எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். எந்த மாநிலத்தின் காலி இடங்களுக்கு விண்ணப்பித்து அய்.பீ.பி.எஸ்., தேர்வை எழுதினார்களோ, அதே மாநிலத்தின் காலி இடங்களுக்குத் தான் தற்போது விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் அரசு மொழியை எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருப்பதும் கட்டாயத் தேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர தேவைகளை இந்த வங்கியின் இணையதளத்தில் 01.06.2012 முதல் வெளியிடப்படும் பகுதியில் அறிந்து கொள்ளலாம்.

மற்ற விபரங்கள்: சிண்டிகேட் வங்கியின் மேற்கண்ட புரொபேஷனரி கிளரிக்கல் பதவிக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் வரும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நேர்காணலுக்கான அழைப்புகள் அனுப்பப்பட்டு இதிலும் வெற்றி பெறுபவர்கள் இந்த வங்கியில் இணையலாம். முழுமையான விபரங்களை இந்த வங்கியின் இணைய தளத்திலிருந்து அறியவும்.

ஆன்-லைன் பதிவு துவங்கும் நாள் : 01.06.2012

ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.06.2012

இணையதள முகவரி: www.syndicatebank.in

அரசு பொறியியல் கல்லூரிகளில்
எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கு 11ஆம் தேதி முதல் விண்ணப்பம்

தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிஏ எம்சிஏ முதுநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்கள் 11ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 42 கல்லூரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களைப்பெற செயலாளர், தமிழ் நாடு எம்பிஏ/எம்சிஏ சேர்க்கை 2012, அரசு தொழில் நுட்ப கல்லூரி, கோவை 641013 என்ற பெயரில் ரூ.300-க்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும். தமிழகத்தை சேர்ந்த எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி இனத்தவர் ரூ.150க்கு டிடி மற்றும் சாதி சான்று நகலையும் சமர்ப்பித்து விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மேற்கண்ட முகவரிக்கு 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். சேர்க்கை கவுன்சலிங் ஜூலை 2ஆவது வாரத்தில், கோவை அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner