இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இளைஞர்களுக்கு பல விதமான வேலைவாய்ப்புகளுடன் கூடிய இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மகளிர் திட்டம் மற்றும் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய பல்வேறு விதமான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. தற்சமயம், இலகு ரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 21 வயதுக்கு மேல் உள்ளவர்களாக இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும், திண்டுக்கல் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள புதுவாழ்வுத் திட்ட அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

 

யுபிஎஸ்சி நடத்தும் ராணுவ, கப்பற் படைக்கான தேர்வு

இந்திய முழுவதும் தேசிய பாதுகாப்பு மற்றும் கப்பற் படைக்குத் தேவையான ஆட்களை நியமிக்க எழுத்துத் தேர்வினை யுபிஎஸ்சி நடத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள எழுத்துத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் இதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக் கலாம்.

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள யுபிஎஸ்சி இணைய தளத்தைப் பார்க்கவும்.புதுச்சேரி அரசில் அப்பர் டிவிஷனல் கிளார்க் பணி

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் Personnel and Administrative Reforms துறையில் அப்பர் டிவிஷனல் கிளார்க் பதவிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 32 வயதிற்குள் சம்பளம்: ரூ.5,200 - 20,200 கிரேடு சம்பளம் 2,400  காலியிடம்: 119 மேலும் விவரங்கள் அறிய : http://recruitment.puducherry. gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.05.2012

குறிப்பு: புதுச்சேரியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner