கரிகால சோழனின் பெருமையைப் போற்றிட கல்லணையில் மாபெரும் மாநாடு - பண்பாட்டுப் பெருவிழா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்புதஞ்சை, மார்ச் 23- கல்லணையில் அடுத்து மாபெரும் மாநாடு பண்பாட்டுவிழா நடைபெறும் என்று தஞ்சையில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் 11.3.2012 அன்று இரவு வஞ்சிக்கப் படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

குடிஅரசு தொகுதிகள் வெளிவந்திருக்கிறது

தந்தை பெரியார் அவர்கள் நடத்திய குடிஅரசு 40 தொகுதிகள் இதுவரை வெளியிட்டிருக்கின்றோம். 1947லே தந்தை பெரியார் அவர்கள் ஒரு தலையங்கம் எழுதியிருக்கின்றார்கள்.

அருமையான ஒரு சொல்லை தந்தை பெரியார் பயன்படுத்தியிருக்கின்றார்கள். திராவிடர் கழகமா? தமிழர் கழகமா? இதுதான் தலைப்பு.
இன்றைக்குத் தமிழர்கள் என்ற போர்வையிலே பார்ப்பனர்கள் நுழையப் பார்க்கிறார்கள். தமிழ னுக்கு ஒரு புத்தாண்டு என்று சொன்னால் நாம் கேட்டுப் போராடினோம். தமிழறிஞர்கள் கேட்டார் கள்.

தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், திரு.வி.க., தமிழறிஞர்கள், சான்றோர்கள், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் மு.வ. இப்படிப் பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து தை முதல் நாள் தமிழனுக்குப் புத்தாண்டு என்று அறிவித்தார்கள்.

மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல்!
தைத் திருநாளே தமிழர் திருநாள் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு.

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உன் தமிழ்ப்புத்தாண்டு
என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடினாரே.

மானமிகு கலைஞர் அவர்கள் தான் தை முதல் நாளே தமிழர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்து சட்டம் கொண்டு வந்தார்கள்.
தமிழ்ப்புத்தாண்டை நீக்க முடியுமா?

அந்த தமிழ்ப்புத்தாண்டை நீக்கலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இப்படிப் பட்டவர்களை ஆதரிப்பவர்களை நீங்கள் அடை யாளம் காணுங்கள். அவர்களுடைய முகமூடி கருத்து ரீதியாக கிழிக்கப்பட வேண்டும்.

தமிழர்களுக்கு தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு இதை எதிர்த்துப் பேசுகிறவர்களுக்குத் துணிச்சல் இல்லையே. நாங்கள் அல்லவா இந்த கருத்தை மக்கள் மத்தியிலே எடுத்து விளக்கினோம். என்ன காரணம்?

தனிப்பட்ட எங்களுக்கென்ன ஆட்சியுடன் உரசலா? இல்லை அந்த இடத்தில் நாங்கள் உட்கார வேண்டும் என்ற ஆசையா? அல்லது வேட்கையா? இல்லை. மாறாக தத்துவம் கொள்கை இன உணர்வு. அதுதான் வரலாறு. அந்த அடித்தளத்திலிருந்து தான் இந்த இயக்கமே கிளம்பியது.

வரலாறு பல பேருக்குத் தெரியாது. அதைச் சொல்ல வேண்டிய கடமை பொறுப்பு நமக்கு உண்டு.

திராவிடர் கழகமா? தமிழர் கழகமா?

இதோ வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு தொகுதி 37. பெரியார் குடிஅரசு களஞ்சியம். இதிலே 157ஆவது பக்கத்திலே தந்தை பெரியார் அவர்கள் 1947லே மே மாதம் 23ஆம் தேதி குடிஅரசிலே வந்த தலையங்கம்.

திரவிடர் கழகமா? தமிழர் கழகமா? இதுதான் தலைப்பு. இதிலே ஒன்றைத் தெளிவாகச் சொல்லு கிறார்கள். திராவிடர் கழகம் பார்ப்பனர் அல்லா தார் - அதாவது ஆரியர் அல்லாதார் கழகம் (எவ்வளவு அற்புதமாக பெரியார் விளக்கம் சொல்லியி ருக்கிறார் பாருங்கள். எங்களைப் பொறுத்த வரையிலே இன்னும் 200 வருடத்திற்குப் பின்னால் வந்தாலும் சரி, நாளைக்கு நாங்கள் எல்லாம் இருக்க மாட்டோம். எங்களு டைய இளைஞர்கள் இருப்பார்கள். அந்த காலத் திலே கூட என்றைக்கும் இந்த இயக்கத்திலே கொள்கைக் குழப்பம் ஒரு போதும் வராது.

வருவதற்கு வாய்ப்பே கிடையாது. காரணம் வரலாற்று ஆவணங்களாக தந்தை பெரியார் அவர்கள் அதை பதிவு செய்திருக்கின்றார். அதற் கான பதிவேடுகள், சரித்திர ஆவணங்கள் எல்லாம் இருக்கின்றன. அதிலே பெரியார் அவர்கள் சொல்லுகிறார் பாருங்கள்.

இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு இவை திராவிட இனத்தைச் சேர்ந்தவை. அவை வாழ்வதற்குரியதாக ஆக்குவதற்கு திராவிடர் கழகம் தோன்றிற்று.

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்

பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் வேறு எந்த பெயரால் அழைத்தாலும் இவ்வியக்கத்தின் கொள் கைகளை விளக்கத் தவறும் இதை ஏன் தமிழர் கழகம் என்று அழைக்கக்கூடாது என சிலர் ஆராயாமல் கேட்டுவிடுகிறார்கள். (அய்யா விளக் கம் சொல்லுகிறார்). தமிழர் கழகம் என்று அழைத் தால் மற்ற திராவிட மொழி பேசும் மக்களை விலக்கி நிற்கும், பார்ப்பனர்களும் தமிழ் மொழி பேசுவதால் தமிழர் கழகத்தில் இடம் பெறுவார்கள்.

இதுதான் விளக்கம். தமிழர் என்றவுடன் அதிலே உள்ளே புகுந்து கொள்வான். அவன் எதில் எப் பொழுது உருமாற்றம் செய்ய வேண்டும் என்பதில் கெட்டிக்காரன் எதிரியை அழிக்க முடியவில் லையா? எதிர்த்துப்பார் முதலில் இருட்டடிப்பு, அதையும் தாண்டி எதிர்ப்பு. அதையும் தாண்டி அழிப்பதற்கு மூர்த்தன்னியமான போர்.

ஊடுருவி அழித்துவிடு....!

அதையும் தாண்டி அவர்கள் நிற்கிறார்களா? உடனே என்ன செய்ய வேண்டும் எதிர்த்து அழிக்க முடியாததை அணைத்து அழிக்க வேண்டும். ஊடுருவி அழித்துவிடு இதுதானே ஆரியத்தின் தந்திர முறை.

காலம் காலமாக வரலாற்றில் வந்த முறை இதுதானே. ஆகவே தமிழர் என்றவுடன் உள்ளே புகுந்து கொள்ள வேண்டும் என்று நினைக் கிறார்கள். தமிழனுக்கு புத்தாண்டு எது? பிரபவ, விபவ, சுக்கில, பிரதானி, விரோதி, குரோதி என்று சொல்லுகின்ற 60 வார்த்தைகளில் ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா?

இதைக் கேட்பது மானஉணர்வு. இதைக் கேட்காதது மானமற்ற அடிமைத்தனம். அப்புறம் என்ன தமிழ்? அப்புறம் என்ன தமிழுக்காக நாங்கள் உயிரை விடுகிறோம் என்று சொல்வது? அப்புறம் என்ன நாங்கள் தமிழுக்காக வாழ்வோம். மூச்சை விடுகிறோம் என்று சொல்லுவது?

தமிழ் எங்கள் உயிர்! என்று கவிதை பாடி விட்டால் போதுமா? இல்லை தமிழால் வாழு கிறோம் என்று சொன்னால் போதுமா?

தமிழ் இசைக்காகப் போராடினார்கள்

தமிழர்கள் தமிழ் இசைக்காகப் போராடினார் களே! இந்த இயக்கம் இல்லை என்றால் தமிழிசை வந்திருக்குமா?

தியாகய்யர்தானே சங்கீத மூர்த்தி என்று சொல்லுகிறீர்கள். கருநாடக சங்கீத மூர்த்திகள் என்று இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களே! அதற்கு முன்னாலே ஒரு நூற் றாண்டுக்கு முன்னாலே வந்த முத்துத் தாண்டவர் தமிழர். மாரிமுத்தா பிள்ளை. அதுபோல அருணாச் சலக் கவிராயர் இவர்கள் மூன்று பேரும் தியாகய் யருக்கு, முத்துசாமி தீட்சதருக்கு, சியாமளா சாஸ்திரி இவர்களுக்கு அப்பாற்பட்டவர்கள். இவர்களுக் கெல்லாம் முன்னால் இருந்தவர்கள்.

சங்கீத மும்மூர்த்திகள்

ஆனால், வரலாற்றில் பார்த்தீர்களேயானால் சங்கீத மும்மூர்த்திகள் என்று இவர்களுடைய பெயர்களைத்தான் சொல்லுவார்கள். தமிழ் உணர்வுள்ளவர்கள் தலையாட்டிக் கொண்டி ருப்பார்கள். பார்ப்பனீயம் எப்படி ஊடுருவி விட்டது பார்த்தீர்களா? ஆகவேதான் பெரியார் அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள். திராவிட மொழிகளுக்குள்ளே நமக்குள்ளே ஒற்றுமை இருக்கிறது என்று சொல்லி விட்டு பார்ப்பன பிடியிலிருந்து வெளியே வர வேண்டும்.
திராவிடர் மாணவர் பிரச்சாரக் குழுவிலே பெரியார் அவர்கள் விளக்கமாகச் சொன்னார்கள். அதுமட்டுமல்ல நண்பர்களே! பார்ப்பனீயம் எப்படி ஊடுருவியது?
லிங்க புராணம்

இங்கே வீதி நாடகத்தை தெற்கு நத்தம் சித் தார்த்தன் குழுவினர் ரொம்ப அற்புதமாக நடத்திக் காட்டினார்கள். நாளைக்கு சிலர் எழுதலாம். ஒரு இனத்தைக் கொச்சைப்படுத்தி இவர்கள் பேசினார் கள் என்று சொல்லக்கூடும். மற்றவர்களும் நினைக் கக்கூடும். அவர்களுக்கு நான் சொல்கிறேன். அவர் கள் சொன்னது அத்துனையும் ஒரு ஒரு வார்த்தை உட்பட லிங்க புராணம் வரையிலே எல்லாம் ஆதாரபூர்வமானது.

மறுக்க முடியாத சான்று உள்ளது. வேண்டு மானால் யாராவது எங்களிடம் வாதம் பண்ணிப் பார்க்கட்டும். ஏன் அரசாங்கமே யாராவது தூண்டி விட்டால் வழக்குப் போட்டுப் பார்க்கட்டுமே. நாங்கள் நீதிமன்றத்தில் புட்டுப் புட்டு வைப்பதற்கு ரொம்ப வாய்ப்பாக இருக்குமே.

ஆகா! லிங்கம் என்று சொல்லி எங்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று சொல்லட் டுமே. பெரியார்தானே கேட்டார் சேரன், சோழன், பாண்டியன் மன்னர்களைப் பற்றிச் சொல்லு கிறார்கள். இங்கே ராஜராஜனைப் பற்றிச் சொன் னார்கள். கரிகால் சோழனைத் தந்த வரலாற்றில் பெருமைமிக்க வரலாற்றில் தேடிப் பார்த்து ஒரு சோழன் கிடைக்கிறானென்றால் அவன் கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான். கரிகால் சோழனைத் தவிர வேறு எந்த சோழனையும் சொல்ல முடியாது.
கல்லணையில் மிகப் பெரிய விழா நடத்தப்படும்

எனவேதான் அடுத்தாண்டிலிருந்து கல்லணை யில் மிகப்பெரிய தமிழர் விழா - கரிகாலனுக்கு விழா என்ற பெயராலே மிகப் பெரியதொரு பண்பாட்டு விழாவை இதேபோன்று மாநாடு போல திராவிடர் கழகம் நடத்தும்.

ஏனென்றால் பண்பாட்டுப் படை எடுப்பை பண்பாட்டுப் படை எடுப்பின் மூலமாக முறியடிக்க வேண்டும். எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த இடத்தில் தேடு என்றார் தந்தை பெரியார். இதை விட்டுவிட்டு வேறு ஒரு இடத்தில் தேடினால் எப்படி கிடைக்கும் என்று கேட்டார்.
சிறைச்சாலைக்குப் போனவன் போன வழியிலேயே வெளியே வரவேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை. எந்த கேட்டு வழியாக உள்ளே கூட்டிக் கொண்டு போனானோ அந்தக் கேட்டு வழியாகத் திரும்பி வரவேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை.

இதற்குப் பெயரா விடுதலை?

அதை விட்டுவிட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியே வந்தால் அதற்குப் பெயர் விடுதலையா? குறுக்கு வழியிலே என்றைக்காவது வருவதற்கு நமக்கு ஆதாரமோ, வாய்ப்போ உண்டா? உங்களுக்கு சில செய்திகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
வீதி நாடகத்தில் சொன்னார்களே!

நமது தோழர்கள் எளிமையாக வீதி நாடகத்தில் சொன்னார்கள். ஞடிடவைஉயட ஊயசசநைச டிக நு.ஏ.சுயஅயளயஅல சூயலயமமயச அந்த காலத்திலே எப்படி அவர் அறியப் பட்டாரோ அப்படி எழுதியிருக்கின்றார்கள்.

ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்திலிருந்து ஆய்வு செய்யப்பட்டு டாக்டரேட் ஆய்வுக்காக பி.எச்.டிக்காக புத்தகமாக வந்திருக்கிறது. ஈ.சா.விசு வநாதன் 1983ஆம் ஆண்டு செய்த ஆய்வு. இதிலே ஒரு கருத்தைச் சொல்லுகிறார். பெரியார் ஏன் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்? அவருடைய அரசி யல் வாழ்க்கை எப்படி வந்தது என்றால் பார்ப்ப னீயத்தை ஏன் எதிர்க்க வேண்டிய அவசியத்திற்கு வந்தார்?

ஏன் திராவிடர் இயக்க நூறாம் ஆண்டு தொடக்கம் என்றவுடன் துடியாய்த் துடிக்கிறான்? நெருப்பில் நின்றவன் மாதிரி துடியாய்த் துடிக் கிறானே. மின்சாரத்தைத் தொட்டுவிட்டது மாதிரி துடியாய்த் துடிக்கிறானே பார்ப்பான். பெரிய பார்ப்பானிலிருந்து சாதாரண அன்னக் காவடி பார்ப்பான் வரை திராவிடர் இயக்கமா? கலைஞருக்கும், வீரமணிக்கும் இது ஒன்றை விட்டால் வேறு வேலையில்லை என்று சொல்லு கின்றான்.

பார்ப்பனர்களின் யோக்கியதை சொல்ல வேண்டுமா?

பார்ப்பானின் யோக்கியதைகளை சொல்ல வேண்டுமானால் புராணங்களை எடுத்தால் 365 நாளும் போதாதே. இதைப் பற்றிப் பேச சரக்கா இல்லை. சொல்லுவதற்கு எங்களுக்கு நேரமில்லை. எங்களுடைய வாழ்நாள் பத்தாது. அவ்வளவு பெரிய கொடுமைகள் நடந்திருக்கின்றன.
இந்த ஆய்வில் எழுதியதை அரைமணி நேரத்திற் குள் நாடகமாகக் காட்டினார்கள். ரொம்ப மகிழ்ச் சியாக இருந்தது. காரணம் இந்த இயக்கத்தினுடைய பாடங்களை அவர்கள் படித்தவர்கள். சேரன், சோழன், பாண்டியன் எல்லாம் நம்மைப் படிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். நமக்குப் பள்ளிக்கூடம் வைக்கவில்லையே.

1610 கிறிஸ்தவ பாதிரியார்

1610ஆம் ஆண்டிலே ஒரு கிறிஸ்தவ பாதிரியார் வருகிறார். இது நானூறு, அய்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி.
நம்மாள் ஒரு ஆள் கூட படித்தவன் கிடையாது. திராவிடர் இயக்கத்தினுடைய பெருமை என்ன? நீதிக்கட்சி பிறகு திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இப்படி திராவிடர் இயக்கம் பரிணாம வளர்ச்சி போல வந்திருக்கின்ற இந்த கால கட்டத்தை எடுத்துக் கொண்டு பார்த்தால் 14ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டு வரை அரசாங்க விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை அரசாங்கம் நாயக்கர் வம்சம்தான் அரசன் காலத் தில் பார்ப்பனர்கள் கல்வி கற்பதற்கு மய்யங்கள்.

பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமே படிப்பு

அதற்கு முன்னாலே ராஜராஜ சோழன் போன்ற சோழர்கள், மற்றவர்கள் இவர்களுடைய காலமெல் லாம் எப்படி இருந்தது என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. அவர்கள் காலத்திலே மதுரையில் 200, 300 மாணவர்கள் என்ற விகிதத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் படித்தார்கள். இவர்கள் அனைவரும் பார்ப்பன மாணவர்கள் மட்டுமே.
இவர்கள் எல்லோரும் சமஸ்கிருதத்திலே படித்தார்கள்.                                   -தொடரும்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner