`ஸ்டெதாஸ்கோப்' வரலாறு!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இதயத் துடிப்புகளை அறிய உதவும் கருவியே `ஸ்டெதாஸ்கோப்'. இன்றைய மருத்துவர்களுக்கு இது மிகவும் இன்றியமையாதது. ரெனி தியோபைல் ஹயாசின்த்யேனக் என்ற பிரெஞ்சு மருத்துவர் 1816-ம் ஆண்டில் ஸ்டெதாஸ் கோப் கருவியை முதன் முதலாக உருவாக்கினார். அது மரத் தினால் செய்யப்பட்டதாக இருந்தது.

அது, ஓர் அடி நீளம் உள்ள துளை போடப்பட்ட உருளையே ஆகும். குழந்தைகள் ஒரு மரக்குச்சியின் ஒரு முனையில் குண்டூசியால் குத்தித் துளை போட்டனர். பின்னர் அவர்கள் ஒருபுறமாக இருந்து ஒலி எழுப்பினர். மறுமுனையில் காதை வைத்து அந்த ஒலியைக் கேட்டனர். அதைப் பார்த்துக் கொண்டிருந்த பிரெஞ்சு மருத்துவருக்குச் சிந்தனை ஓடியது. அந்தச் சிந்தனையின் விளைவாகவே அவர் ஸ்டெதாஸ்கோப் கருவியை உருவாக்கினார்.

தியோபைல் தனது ஸ்டெதாஸ் கோப்பை பயன்படுத்தி நோயாளி களைச் சோதித்தார். அவர் தனது ஸ்டெதாஸ்கோப் குழாயின் ஒரு முனையை நோயாளியின் நெஞ்சில் வைத்து, அவருடைய இதயமும், நுரையீரல்களும் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்களைக் கேட்டார். இப்படிப் பல நோயாளிகளைச் சோதனை செய்து, அவர்களின் உடலில் ஏற்பட்ட சப்தங்களையும் அறிந்தார்.

முதல் நோயாளியின் இதயத்தில் இருந்து எழுந்த சப்தங்களையும், பிறகு சோதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து எழுந்த சப்தங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, அவர் ஆய்வு நடத்தினார்.

முதல் நோயாளியின் இதயமும், நுரையீரல்களும் எழுப்பிய சப்தங்களின் பொருள் என்ன என்பதை ஆதாரப் பூர்வமாக அறிந்துகொள்வதற்காகவே அவர் இந்த ஒப்புநோக்கும் ஆராய்ச் சியை நடத்தினார். அந்தக் காலத்தில், இதயத் துடிப்புகள் உண்டு என்பதை யும், அவை ஒலியை எழுப்பும் என்ப தையும் விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ளவில்லை.

இதயத் துடிப்புகளை அறிந்து கொள்வதற்காக தனது ஸ்டெதாஸ்கோப் மூலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட தியோபைல், 1818ஆ-ம் ஆண்டில் ஒரு புகழ்பெற்ற மருத்துவ நூலை எழுதினார். அந்த நூலில், தனது ஸ்டெதாஸ்கோப் ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். தியோபைலின் நூலின் தலைப்பு, `ஆஸ்கல்டேஷன் மெடியேட்' என்பதாகும்.

`ஆஸ்கல்டேஷன்' என்றால் என்ன? உடலில் எழும் சப்தங்களைக் கேட்பது என்று பொருள். இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டுபிடித்து அறிந்துகொள்வதற்கு `ஆஸ்கல்டேஷன்' முறை இப்போது பயன்படுத்தப்படுகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner