7 கோடி ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வட அமெரிக்கா கண்டத்தில் 6 கோடியே 90 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய டைனோசரின் எலும்புக்கூடு படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அலமோசரஸ் சஞ்சுவான் சிங் டைனோசரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.

அவை ஒட்டக சிவிங்கியைவிட மிக நீளமான கழுத்தைக் கொண்டவை. இந்த வகை டைனோசரஸ்கள் தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவை என கருதப்படுகிறது. அவற்றின் எலும்புப் படிவங்கள் உத்தா, நியூ மெக்சிக்கோ மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் ஆகிய இடங்களில் 2003 முதல் 2006-ஆம் ஆண்டு வரை கண்டெடுக்கப்பட்டது. மோண்டானா மாநில பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் டென்வர் டபூள்யூ போவியர். பென்சில் வேனியாவின் ஹரிஸ் பர்க்கைச் சேர்ந்த ராபர்ட், எம். கல்லிவ ஆகியோர் இது குறித்து ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த டைனோசரின் எலும்புக்கூடு படிவம் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவின் மோண்டானா மாநிலத்தில் (அருங்காட்சியகத்தில்) வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner