ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சிகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சிகள்

உடற்பயிற்சி இல்லாத உடல் சதை உறுதியாக இருக்காது. இந்தச் சதையில் திரவம் சேர்ந்திருக்கும். அத்துடன் கழிவுப் பொருட்கள் நீங்குவது தடைபட்டு, ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். எப்போதும் உடலை மந்தமாக வைத்திருந்தால் இதயக் கோளாறும் ஏற்பட்டு எல்லா விதங்களிலும் ஆரோக்கியம் கெட்டுவிடும். ஆனால் உறுதி யூட்டக்கூடிய உடற்பயிற்சி களால் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறி, உடல் கட்டுக் கோப்புடன் விளங்கும்.

உடற்பயிற்சியில் அனைவருக்கும் ஏற்றது. நடப்பது. சுறுசுறுப்பாக நீண்டதூரம் நடக்க லாம். நடக்கும்போது சுவாசத்தை ஆழமாக இழுத்து விட வேண்டும்.ஆனால் முறையாக நடக்க வேண்டும். எப்படி உடலை அசைத்து நடக்க வேண்டுமோ அப்படி அசைத்து, சமமான அடிகள் வைத்து கடைசிவரையில் ஒரே வேகத்துடன் நடப்பது  ஒரு சிறந்த பயிற்சியாகும். மேலும் நடக்கும் பாதை வளைந்துவளைந்து செல்லாமல் ஒரே நேர் கோட்டில் அமைய வேண்டும்.

வீட்டிற்குள்ளேயே பயிற்சி பெற பல்வேறு உபகரணங்கள் வந்துவிட்டாலும், அவைகள் இல்லாமல் செய்யும் பயிற்சி சீரான பலனைத் தரும்.கைகளையும், கால்களையும் வீசுவது, உட்கார்ந்து எழுந்திருப்பது என்பது போன்ற பயிற்சிகள் பலவீனமான மனிதர்களுக்கும் உறுதியளிக்கக்கூடியவை. படிப்படியாக பயிற் சிகளின் தன்மை, காலஅளவு ஆகியவற்றை அதிகரிக்கலாம்.

அடிவயிற்றை இழுத்து சுவாசத்தை வெளியே விடுவதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். இது மிகவும் எளிய பயிற்சியாக இருந்தாலும் ஜீரண உறுப்புகளுக்கு நல்ல பயிற்சியாகும்.  இதன்மூலம் உணவுச்சத்துக்கள் உடலால் நன்கு கிரகிக்கப்பட வாய்ப்பு உண்டு..
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner