மருத்துவ தகவல்கள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காய்கறி நல்லதே கீரை நல்லதே
பழம் நல்லதே என்றாலும் பார்த்தே சாப்பிடணும்!

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகள், பழங்கள் கீரைகள் சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர்கள் மட்டுமல்ல... எத்தனையோ பேர் சொல்லிக் கேள்விப் படுகிறோம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் என பல சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் நாம் கவனிக்காத இன்னொரு முக்கிய விஷயத்தை சமீபகாலமாக நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

காய்கறிகளையும் பழங்களையும் கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம் என்கிறார்கள். அப்படி என்ன முறையாகப் பயன்படுத்துவது? காய்கறிகள், பழங்கள், கீரைகளை சுத்தமாகக் கழுவிய பிறகே பயன்படுத்துகிறோம். அதேபோல, இவற்றை  வெட்டிய உடனே பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம் என்பதுதான் நிபுணர்கள் சொல்லும் ரகசியம். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் எல்லோரையும் யோசிக்க வைப்பவை.

காய்கறிகளை வெட்டி வைத்துவிட்டுத் தாமதமாகப் பயன்படுத்தும்போது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், சில வகை ஒட்டுண்ணிகள் அவற்றில் உருவாகி விடுகின்றன. குறிப்பாக  தீமை செய்யும் நுண்ணுயிரிகள் அதிகமாக உருவாகின்றன. இதனால் நமக்கு நன்மை செய்யும் காய்கறிகள், பழங்களே நமக்குத் தீமை செய்யும் வில்லனாக மாறிவிடுகின்றன.  குமட்டல், வயிற்றுப் போக்கு, தலைவலி போன்ற பல பிரச்னைகள் இந்த சுகாதாரமற்ற பயன்பாட்டால் ஏற்படுகிறது.

ஆகவே மக்களே காய்கறிகள், பழங்களை வெட்டிய உடனே பயன்படுத்துங்கள். இதையே வேறு மாதிரி சொன்னால் காய்கறிகள், பழங்களை உடனே பயன்படுத்துகிற மாதிரி இருந்தால் மட்டுமே வெட்டுங்கள்என்கிறார்கள். அதிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விஷயத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று         பரிந்துரைத்திருக்கிறது.

இதுபோன்ற 'ரெடி டு ஈட் என்று உடனடியாக உண்பதற்குக் கடைகளில் கிடைக்கிற உணவுப் பொருட்கள் எல்லாமே பரிசீலனைக்கு உரியவைதான். இதற்கு வெங்காயம் நல்ல உதாரணம். ஓட்டல்களில் சமையல் பயன்பாட்டுக்காக காலையிலேயே கிலோ கணக்கில் வெங்காயத்தை வெட்டி வைத்து விடுகிறார்கள். காலையில் வெட்டி வைக்கப்படுகிற வெங்காயம்தான் இரவு வரை ஆனியன் தோசை, ஆம்லெட்டுகள் என எல்லா உணவு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, வெளியிடங்களில் தவிர்க்க முடியாமல் சாப்பிட நேர்கிறபோதும் இதுபோல் வெட்டி வைக்கப்பட்ட சாலட்டுகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்களிலிருந்து தயார் செய்யப்படுகிற பழரசங்கள் போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்தான்!

அறிகுறிகள் இல்லாமலும் ஆபத்து வரும் !

அம்மாவோ, மனைவியோ, நீங்களோ வீட் டிலேயே சமைத்த பாரம்பரிய உணவைச் சாப்பிடும் வரையில், உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறித்த பயம் இல்லை! நீரிழிவு பக்கவிளைவுகளின் காரணமாக பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற் படக்கூடும். குறிப்பிட்ட இடைவெளிகளில் மருத் துவ ஆலோசனை பெற்றுவரும் நிலையில், இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தாது. மருத்துவரே இப்பிரச்சினைகளுக்கும் மருந்துகள் அளித்து, அபாயம் வரும் முன் காத்துவிடுவார். அதனால்தான் ஆரம்ப நிலையிலேயே மாத்திரைகள் வழங்கப்படு கின்றன.

கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் இந்தப் பிரச்னைகள் நீரிழிவாளர்களுக்கு ஏற்படும்போது, இதயநோய்களும் ஸ்ட்ரோக்கும் தாக்கும் அபாயம் உண்டு. இவை தொடக்கத்திலேயே அறிகுறிகளைக் காட்டாது எனினும், மருத்துவர்களால் வரவிருக்கும் பிரச்னைகளை உணர்ந்துவிட முடியும். ஆகவே, மருத்துவர்கள் நீரிவுக்கான மருந்துகளைத் தாண்டி, கூடுதலாகப் பரிந்துரைக்கும் மருந்துகளையும் தயங்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்த ஓட்டத்தில் காணப்படுகிற மென்மையான, மெழுகு போன்ற ஒருபொருள்தான் கொலஸ்ட்ரால். இப்படி, குருதிக்குழல்களில் படிந்துவிடக்கூடிய ஒருவித கொலஸ்ட்ராலையே, நாம் கெட்ட கொலஸ்ட்ரால் என்கிறோம். இந்த கொலஸ்ட்ரால் படிவு காரணமாக குருதிக்குழல்களின் சுற்றளவு குறைந்து போகும். இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகும். இதன் விளைவாக மாரடைப்பு அபாயம் ஏற்படும். அது மட்டுமல்ல...

இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குருதிக்குழல்களில் கெட்ட கொழுப்பு படிதல் அதிக மாகும்போது, இதயத்தை ஆபத்துக்குள் தள்ளி, இதயநோய்களையும் வழங்கும். இது அனைத்து மக்களுக்குமே பொதுவானதுதான் என்றாலும், நீரிழிவாளர்களுக்கோ அபாயத்தின் அளவு மிக அதிகம். உயர் ரத்த அழுத்தமும் இதயநோய்களும் சட்டென தாக்கும். அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆண்டுக்கு ஒரு முறையோ கொலஸ்ட்ரால் டெஸ்ட்(லிபிட் புரஃபைல்) எடுத்துக் கொள்ளும்படி நீரிழிவாளர்களுக்கு அறிவுறுத்தப் படுகிறது.

ரத்த அழுத்த சோதனை (பி.பி செக்அப்) மாதம் தோறும் அல்லது வாரம் தோறும் எடுக்கும்படியும் கூறப்படுகிறது. இனியாவது, நம் மருத்துவர் தேவையில்லாமல் டெஸ்ட்டுக்கு எழுதிக் கொடுக் கிறார், எக்ஸ்ட்ரா மாத்திரைகள் எழுதிக் கொடுக் கிறார் என்றெல்லாம் குழம்பவும் புலம்பவும் வேண்டாம். சில நீரிழிவாளர்கள் நிறைய மாத்திரைகள் எழுதிக் கொடுத்தால், மருத்துவரையே மாற்றிவிடுவதும் உண்டு. இந்தக் காரணத்தால், விஷயத்தைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஓரிரு மாத்திரைகளோடு நிறுத்திவிடுவது சில மருத்துவர் களின் வழக்கமாகி விட்டது.

கொலஸ்ட்ரால் குறைக்கும் மாத்திரைகள்...கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகம் கொண்ட நீரிழிவாளர்களுக்கு முதலில் பரிந்துரைப்பது இதயத்துக்கு இதமான உணவுகளையே. இரண்டாவ தாக முறையான உடற்பயிற்சி. மூன்றாவதாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மாத்திரைகள். இந்த மாத்திரைகள்  தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும்படியே பரிந்துரைக்கப்படும். சோதனையில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து விட்டாலும் கூட, மருத்துவர் அறிவுறுத்தினால் தொடர்ச்சியாக உட்கொள்ளத்தான் வேண்டும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஒற்றை மாத் திரையும் உண்டு. காம்பினேஷன் மாத்திரைகளும் உண்டு. நம் உடல்நலம், வாழ்க்கை முறைக்கு ஏற்ப இம்மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். ஒருவருக்கு அளிக்கப்படும் மாத்திரை இன்னொரு வருக்கு அப்படியே பொருந்தாது. எல்.டி.எல் எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு பொதுவாக ஸ்டாட்டின் மாத்திரைகள் வழங்கப்படும். ஸ்டாட் டின் தெரபி என்று அழைக்கப்படும் இந்த முறையை உலகம் முழுக்கவே மருத்துவர்கள் தவறாது பின்பற்றுகிறார்கள். அதாவது...கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வந்தாலும் கூட, நீரிழிவாளர் களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களோடு, ஸ்டாட்டின் தெரபியும் தொடரப்பட வேண்டும். வெளிப் படையான இதயநோய் கொண்டவர்களுக்கு ஸ்டாட்டின் தெரபி அவசியம். இதயநோய் இல் லாமல் இருந்தாலும், 40 வயது தாண்டி, இதய நோய்களுக்கான ஒரிரு அபாய காரணி கொண்ட வர்களுக்கும் (நீரிழிவு போன்றவை) ஸ்டாட்டின் தெரபி தேவை.

இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்குள் இருந்தாலும் கூட, வாழ்க்கைமுறை மாற்றங்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு 100 என்பதைத் தாண்டி னாலும், இதயநோய்களுக்கான அபாய காரணிகள் ஒன்றுக்கு அதிகமாக இருந்தாலும், இதயநோய் இல்லாமல் இருந்தாலும் கூட, 40 வயதுக்கு குறை வானவர்களுக்கும் ஸ்டாட்டின் தெரபி தொடங்கப் பட வேண்டும். நீரிழிவாளர்களுக்கு ஏன் கொலஸ்ட் ரால் மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது என இப்போது புரிகிறதா?

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள்...உயர் ரத்த அழுத்தமும் அறிகுறி களைக் காட்டாது என்பதால், மருத்துவரைச் சந்திக்கும் மாதாந்திர/காலாந்திரத் திட்டத்தில் இதையும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே சோதித்துக் கொள்ளும் எளிதான பிபி மானிட்டர்களும் இப்போது கிடைக்கின்றன. பிபியை கண்டுகொள்ளாமல் விட்டாலோ, மருத் துவர் அளித்த மாத்திரைகளை உட்கொள்ளாமல் விட்டாலோ, அது பெரிய பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும்.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காக மருத்துவர்கள் ஒன்று அல்லது கூடுதலான மாத் திரைகளை அளிக்கக்கூடும். மருத்துவர் அறிவுறுத் திய படி அம்மாத்திரைகளை உட் கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும். ஏதேனும் பக்க விளைவுகள் தோன்றினால், உடனே மருத்துவரிடம் கூறுங்கள். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்து வதற்காக   வகை மருந்துகள் அளிக்கப்படுகின்றன.

கல்லீரல் வீக்கத்துக்கு சிகிச்சை

கல்லீரலில் அதிகக் கொழுப்பு சேர்வதைத்தான், கல்லீரல் மிகைக் கொழுப்பு நோய் என்று சொல்கிறோம். இவ்வாறு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடல் கொழுப்பைக் கல்லீரலால் முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத நிலை உருவாகும் போதுதான், கல்லீரல் செல்களில் கொழுப்பு படிந்து, இந்த நோய் ஏற்படுகிறது. இதற்குக் காரணமாக இருப்பதில் முக்கியமானது மது பழக்கம். மது பழக்கமில்லை என்றால், அடுத்த முக்கியமான காரணம் நீரிழிவு நோய்தான்! உடல் பருமனும், மிகை ரத்தக் கொழுப்பும் இந்த நோய்க்கு வழிவகுக்கும். சில மருந்துகளாலும், பரம்பரை காரணங்களாலும்கூட இந்நோய் ஏற்படலாம்.

ஒரேயொரு ரத்தச் சர்க்கரை அளவை வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது என்பதால், ரத்தச் சர்க்கரை அளவு சீராக இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோன்று ரத்தக் கொழுப்பு அளவை கண்டறிவதும் அவசியம். மது பழக்கமிருந்தால் அதைக் கைவிடவும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவில் மாவு,கொழுப்பு உணவைக் குறைத்து, காய்கறி, கீரை, பழங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல் இருப்பதால், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். இதன் காரணமாகக் கல்லீரலில் நாரிழை சேர்ந்து, கல்லீரல் செல்கள் நலிந்து சிரோசிஸ் நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை!.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner