தினமலருக்கு வெட்கமாவது, மானமாவது...
முன்பு அடுத்து Page:

இவர்களில் யார் பதிவிரதைகள்?

இவர்களில் யார் பதிவிரதைகள்?

இவர்களில் யார் பதிவிரதைகள்? 21.12.1930 - குடிஅரசிலிருந்து... 1. சீதா, புருஷன் பந்தோபதினால் வேறு புருஷன் சாவகாசம் செய்ய முடியவில்லை. 2. மீனாட்சி, புருஷன் உதைத்து விடுவானே என்று உதைக்குப் பயந்து சோரம் செய்ய வில்லை. 3. நாமகிரி ஜனங்கள் கேவலமாய் பேசுவார்களே என்று மானத்திற்குப் பயந்து வேறு புருஷனை இச்சிக்கவில்லை. 4. இரஞ்சிதம், தன் மனதிற்குப் பிடித்த கணவன் கிடைக்கவில்லை என்று கருதி யாருக்கும் இணங்கவில்லை. 5. சரவதி, மேல் லோகத்தில் செக்கில் போட்டு ஆட்டுவாரென்ற கஷ்டத்திற்குப்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:59:03

கடவுளின் நடவடிக்கை: சித்திரபுத்திரன்

கடவுளின் நடவடிக்கை: சித்திரபுத்திரன்19.10.1930- குடிஅரசிலிருந்து... உலகத்தை எல்லாம் உண்டாக்கி அதில் உள்ள எல்லாவற்றையும் நடத்தும் ஒரு சர்வசக்தியுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரால் தான் (அவர் இஷ்டப்படி) உலகம் இயங்கு (நடைபெறு) கின்றது என்று சொல்லப் படுமானால் அவரை நடுநிலை யுடையவரென்று சொல்லுவதைவிட பாரபட்சமுடையவரென்று சொல் வதற்கே மிக மிக இடமிருக்கின்றன. அவரை கருணையுடையவரென்று  சொல்லுவதை விட கருணையற்ற வரென்று சொல்லுவதற்கே ஏராளமான பிரதியட்ச உதாரணங்கள் இருக்கின்றன. அவரை நீதிவான் என்று....... மேலும்

30 டிசம்பர் 2016 15:57:03

ஜாதி முறை

ஜாதி முறை 14.12.1930 - குடிஅரசிலிருந்து... ஜாதிப்பெயர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை சமீபத்தில் வரப்போகும் சென்சஸில் ஜன கணிதமெடுக்கும் சந்தர்ப்பத்தில் கணக்கு எடுக்க வருபவர் ஜாதிப் பெயரைக் கேட்டால் அதற்கென்ன பதில் சொல்வதென்றும், அவர்களிடம் தனக்கு ஜாதி இல்லை யென்று யாராவது சொன்னால் அது சென்சஸ் சட்டப்படி குற்றமாகாதா என்றும் மற்றும் பலவிதமாக பல கனவான்களிடமிருந்து கடிதங்களும் பலர் கையொப்பமிட்ட மகஜர்களும் நமக்கு வந்திருக் கின்றன. இதைப் பற்றி அறிந்து கொள்ள லாகூர் ஜாதி....... மேலும்

30 டிசம்பர் 2016 15:53:03

வெற்றிக்கு அடிப்படை இலக்கு!

வெற்றிக்கு அடிப்படை இலக்கு!

வெற்றிக்கு அடிப்படை இலக்கு! வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து கண்டறிந்தவர் எஸ்.இராஜேஷ் அய்.பி.எஸ். உத்தரப் பிரதேசத்தின் 2011 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரியான இவர் ஆக்ரா, ஜான்சி, லக்னோ ஆகிய நகரங்களில் ஏ.எஸ்.பி.யாகவும், கான்பூர் நகர எஸ்.பி.யாகவும் இருந்தவர். தற்போது அலிகரில் உள்ள பி.ஏ.சி.  சிறப்புப் படையின் கமாண்டராகப் பதவி வகிக்கிறார். இராஜேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர், படித்து என்னவாகப் போகிறீர்கள்? எனக் கேட்டார்........ மேலும்

28 டிசம்பர் 2016 16:13:04

கணிதத்தை ஆட்கொண்ட ஆய்லர்

கணிதத்தை ஆட்கொண்ட ஆய்லர்

கணிதத்தை ஆட்கொண்ட ஆய்லர் சுவிட்சர்லாந்தில் பேசல் எனும் இடத்தில் 309 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று லியோ னார்ட் ஆய்லர் என்ற மாபெரும் கணித மேதை பிறந்தார். இளம் வயதிலேயே அதீத ஆற்றல் கொண்ட ஆய்லர், தாம் படித்த புத்தகங்களில் தோன்றும் குறிப்பு களை ஒரு வார்த்தைகூடப் பிறழாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றல் பெற்று விளங் கினார். இளம் வயதிலேயே தனது....... மேலும்

28 டிசம்பர் 2016 15:50:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கர்நாடக போலீசார் தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில், நான் கிருஷ்ணனாம்; நீ கோபிகையாம் என்ற வசனத்தை அடிக்கடி பக்தைகளிடம் சொல்லக் கூடியவர் நித்யானந்தா எனக் குறிப்பிட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை.

டவுட் தனபாலு: இது ஆபாசமா...? அப்போ, கர்ப்பப்பை இருக்கறதால தான், குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வருது; அதனால, பெண்கள் எல்லாம் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு உங்க பகுத்தறிவுப் பகலவன் சொன்னாரே.. அதுக்குப் பேர் என்னவாம்...?

- தினமலர் 19.7.2011

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே அது தினமலர் வாளுக்குத்தான் பொருந்தும். கேட்ட கேள்விக்கு என்ன பதில்? நித்யானந்தா சொன்னது ஆபாசமே இல்லையா?! வக்கிர துர்க்குணமா இல்லையா? பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் கோழைத்தனம் தானே தினமலரின் பதில்?

பிள்ளைப் பெறும் எந்திரம்தான் பெண்கள் என்று கருதப்படும் சமூக அமைப்பில் பெரியார் சொன்ன புரட்சி மொழிதான் கர்ப்பப்பையை எடுங்கள் என்பது. பெண்கள் உரிமை - முன்னேற்றம் - கிளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்து. அது - பெண்ணியல்வாதிகளால் வரவேற்கப்படும் கருத்து.

ஆனால் நித்யானந்தா பக்தைகளைப் பார்த்து நான் கிருஷ்ணன் - நீ கோபிகை! என்று சொன்னது ஆபாசமானது - இரண்டும் ஒன்றல்ல.
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய காம வெறியாட்டம் தினமலர் கூட்டத்திற்கு லீலைகளாக இருக்கலாம்.

குளத்தில் கோபிகைகள் நீராட, அவர்களின் உடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த ஒழுக்கக் கேடன் அவாளின் பார்வையில் உத்தமப் புத்திரக் கடவுளாக இருந்து தொலையட்டும்!

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டு யாருடனும் புணரலாம் என்கிற சாத்திரத்தைக் கடைபிடிக்கும் பார்ப்பனர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

ஆடைகளைத் தருமாறு கோபிகைகள் கெஞ்சிக் கூத்தாட, கரைக்கு வந்து இரு கைகளையும் தலைக்குமேல்  தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால் தான் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதித்து, பெண்களின் முழு நிர்வாணத்தை ரசித்த காலிப் பயல் அவாளின் கண்ணிறைந்த கடவுளாகவே போய்த் தொலையட்டும்!

அதைப் போய் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார் அவர்கள் சிந்தனையோடு முடிச்சுப் போடுவது தினமலரின் சீரழிந்த, சீக்குப் பிடித்த வக்கிரப்புத்தியைத்தான் வெளிப்படுத்தும். இதே தினமலர் வார மலரில் (23.12.2007) சிதம்பரம் தீட்சதர்கள் வீட்டில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைப்பற்றி எழுதியதே - நினைவு இருக்கிறதா?

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் தீட்சதர்கள் தங்கள் பெண்களுக்கு ஏழு வயது ஆகும் முன்னரே திருமணம் செய்து விடுகின்றனர். மாப்பிள்ளைப் பையனுக்கு 12 வயதுக்குள்தான் இருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது. வீட்டிலேயே வேத பாடங்கள் சொல்லித் தருகின்றனர்.

பால்ய விவாகத்தை 5 நாள் திருமணச் சடங்காக நடத்துகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீடு போய் விடுவார்கள். துள்ளித் திரிந்து விளையாடிய பெண், மாட்டுப் பெண்ணாகி வீட்டு வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கு அய்ந்து வயதில் திருமணமானாலும், மூன்று வயதில் திருமணமானாலும் அன்று முதல் அந்தப் பச்சைக் குழந்தைக்கு மடிசார் புடவை கட்டிவிடுகின்றனர். மாமன் மாமி கால்களில் விழுந்து கும்பிடவும் பழக்குகிறார்கள். 14 வயது ஆகும் திருமணமான ஒரு தீட்சதர் பெண்ணுக்கு மூன்று, நான்கு குழந்தைகள் கூடப் பிறந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர் உலகம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலையோ...

(தினமலர், வாரமலர் டிசம்பர் 23, 2007)

தீட்சதர் வீட்டு 14 வயது பெண் 4 குழந்தைகள் பெறும் நிலைக்கு என்ன பெயர்?

பிள்ளை பெறும் எந்திரமாகப் பெண் இருக்கிறாளே என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதானே!

உங்காத்துப் பெண்ணுக்கும் சேர்த்துதானே பெரியார் குரல் கொடுத்தார், அதைக் கொச்சைப் படுத்துகிறாயே!

1928ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு  தினமலர் போல அப்பொழுது இந்து ஏடு முந்திரிக்கெட்டையாகத் துள்ளும். அதுபற்றிய ஒரு குறிப்பு இதோ: (திராவிடன் இதழில் (13.3.1928 பக்கம் 7)

இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்துக்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ. இந்துவே! நீர்  சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே இந்தக் காலத்தில்கூட, 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதாவது விவாகச் சடங்கல்ல, அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ, இந்துவா! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10 அல்லது 12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாகப் பெயர் செய்து மொட்டையடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் 7).

அந்த இந்துவின் மறு அவதாரமாக தினமலர் திரிநூல் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது.

அன்று இந்து மறுமொழிகூட கூற முடியாமல் திணறியதுபோல், அனேகமாக ஒவ்வொரு நாளும் தினமலர் சவுக்கடி மட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

பார்ப்பனர்களுக்கு மானமாவது! வெட்கமாவது!!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Comments  

 
#30 Ajaathasathru 2013-05-16 03:44
அய்யா தமிழ்வானரே! அப்பன் குதிருக்குள் இலை என ஒப்புக்கொண்டதற் கு நன்றி! இந்து மதத்தில் மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல , எல்லா நம்பிக்கைகளுமே அவரவர் பழக்க வழக்கங்கள் தான்! சாத்திரங்கள் பல இருந்தாலும் அவை ஒன்றுக்கு ஒன்று முரணானது என்பதால் எவையுமே பின்பற்ற லாயக்கானது அல்ல! மொத்தத்தில் இந்துமதம் ஒரு ஊசிப்போன அவியல்! அதானால்தால்தான் அப்படி ஒரு மதமே இல்லை என்கிறோம்! நல்ல கருத்துக்கள் பின்பற்ற மதம் என்ற போர்வை எதற்கு? மனித நேயம் ஒன்றே போதுமே!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#29 tamilvanan 2013-05-15 07:21
புகழேந்தி அவர்களே. மனு தர்ம சாஸ்திரம் வேறு சாதிகளில் பெண் எடுப்பதை கண்டிக்கவில்லை என்பதே உண்மை. அந்த காலத்தில் பல மனைவியரை மணப்பது குற்றமாக கருதப்படவில்லை. மனுவின் நூலில் தன் சாதியை சார்ந்த ஒரு பெண்ணையாவது மணம் புரியவேண்டும் என்று தான் சொல்லப்பட்டு இருக்கிறது. இல்லாவிட்டால் அந்த சாதி பழக்கங்கள் மறைந்து பொய் விடலாம் என்று கூறுகிறது.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#28 pugazhendhi 2013-05-13 21:16
வேற்று சாதியில் பெண் எடுப்பதை மனு நீதி சாஸ்திரம் ஏற்றுகொள்கிறதா என்று தமிழ்வாணன் பதில் சொல்லட்டும் இன்றைக்கும் விதவை திருமணத்தை இந்து மதவாதிகள் எதிர்ப்பதேன்?பிருந்தாவனத்து விதவைகளை செத்தபிறகு கூட அவர்களுக்கு முறையான சவ அடக்கம் செய்யபடாமல் இருந்தது கேட்டு உச்சநீதிமன்றம் சுலபா இண்டர்நஷனல் அதிபர் மூலம் அந்த விதவைகளுக்கு பண உதவிகள் செய்ய ஏற்பாடு செய்தது எனபது தமிழ்வானருக்கு தெரியுமா?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#27 tamilvanan 2013-05-10 18:42
அரவரசரே
இந்து மதத்தில் இருப்பதாக கூறப்படும் பல மூட நம்பிக்கைகள் மக்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்களையும், நீண்ட வரலாற்றாலும் வந்தவை. அவற்றை எந்த மத நூல்களும் சொல்லவில்லை. வட்டாரத்திற்கு வட்டாரம் வெறு படுகிறது. எடுத்துக்காட்டா க, திருமணம் சாதிக்குள் செய்ய எந்த மத நூலும் சொல்லவில்லை. மாறாக, இதிஹாச நூல்களில், பல்வேறு சமயங்களில் வெற்று சாதியில் பெண் எடுத்ததாகவே கூறப்படுகிறது. விதவைகளும் மறுமணம் செய்து கொண்டதாக இருக்கிறது. பல முறை, மூட நம்பிக்கைகளை இந்து மதத்துடன் தொடர்பு படுத்துவதாகவே கருதுகிறேன்.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#26 Ajaathasathru 2013-05-06 22:29
அய்யா நாகராசு! கொம்பு சீவி விட எத்தனை பேர் கிளம்பி இருக்கிரீர்கள்! உங்கள் அரிப்பிற்கு நீங்கள்தான் சொரிந்துகொள்ளவே ண்டும்! பகுத்தறிவாளர்கள ் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை என ஒப்புக்கொள்ளும் !
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#25 நாகராஜன் 2013-05-04 07:01
Quoting vanakam:
பகை இலியாரே, இஸ்லாம் மற்றும் இயசு பற்றி எழுத தைரியும் உள்ளதா?

இந்துமதத்தில் மட்டும்தான் நீங்கள் சொல்லும் முட நம்பிக்கை உள்ளதா? கிருஸ்துவமதத்தி லும், இஸ்லாமிய மதத்திலும்கூடத் தான் முட பழக்கம் உள்ளது அதை எதிர்க்கும் திராணி உங்களிடம் உள்ளதா, இதுவரை உங்கள் பகுத்தறி பகலவன் அதை எதிர்க்காதது ஏன்.... ஏன் என்றால் பொட்டைப்பசங்க இளிச்சவாயன் தலையில்தான் மிளகாய் அரைப்பானுங்கன்ற பழமொழி உங்க தலைவருக்கு பொருந்தும்.
இந்துக்கள் அமைதியானவர்கள், மற்ற மதத்தினரைப்பற்ற ி கூறினால் உங்க தலைவரின் அடியில் பாம் வைத்துவிடுவார்க ள் அந்த பயந்தான் காரணமாக இருக்குமோ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#24 ajaathasathru 2013-04-28 22:39
காணக்கிடைக்காத காட்சியை கண்டு களித்த தமிழ் வாணருக்கும், தேடிப்பிடித்து ஜொள்ளு விடும் ரமேசுக்கும் நன்றி! என்னுடைய பதிலை நன்றாக படியுங்கள்! இத்தகைய பத்திரிகைகள் இந்து கலாசாரம் பறிபோகிறதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கும்போது சாடுங்கள்! விதண்டா வாதம் எதற்கு ?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#23 ரமேஸ் 2013-04-23 10:43
Quoting tamilvanan:
இன்று திராவிடப்ப் பத்திரிகையான நக்கீரனில் சுஷ்மிதா சென்னின் உள்ளாடை காட்டி அமர்ந்து இருக்கும் படம் வெளி ஆகி இருக்கிறது. அதை கண்டு களித்துவிட்டு, பார்பன ஏடுகளில் ஆபாசம் வெளி வருகிறது என்று அஜாத சத்ரு போன்ற கழக கண்மணிகள் தங்கள் குமுறலை தொடருங்கள்.

100000% கரக்டு...சபாஷ்
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#22 Ajaahasathru 2012-12-25 22:12
கலைஞரின் அறிக்கையை நன்றாகப்பாரும் தமிழ்வாணரே! நல்லவை நீக்கி அல்லவை மட்டுமே பிரச்சாரம் செய்யத்தானே உங்கள் ஏடுகள் புறப்பட்டு விட்டன ! உங்கள் ரெட்டை வேடத்தையே கலைஞர் சூட்டினார்! மற்றபடி நீங்கள் பிரசுரிக்காதது பற்றி எந்த வருத்தமும் இல்லை!
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 
 
#21 tamilvanan 2012-12-24 20:07
தினமலம் என்றால், ஏன் தனது கட்சியினரின் பொரட்டனகளை பற்றி அந்த ஏட்டில் வரவில்லையே என்று கலைஞரே அறிவிப்பு விடவேண்டும்? அவருக்கு என்று இருக்கும் ஊடகங்களும் ஏடுகளும் போதாதா? கலைஞர் அவற்றை எல்லாம் விட அந்த எட்டை மதிக்கிறார்? அப்படி ஆயின் அதை எப்படி மலம் என்று அவச்சொல்லால் பழிக்கலாம்.
உரைத்திடின் எமக்கே.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner