உரிய வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள்: பதக்கம் வென்ற வீரர்கள் அரசுக்குக் கோரிக்கை
முன்பு அடுத்து Page:

கண்கள் பாதுகாப்பு

 கண்கள் பாதுகாப்பு

கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம்.  அதேநேரம், நாள்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும். சில எளிய முறைகள்: > எப்போதுமே வெளியே போய்விட்டு, அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பிய பிறகு கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள். பொதுவாகக் கைகளிலிருந்துதான் நுண்கிருமிகள் கண்களுக்கு அதிகம் தொற்றுகின்றன. > வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும். வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக்....... மேலும்

03 அக்டோபர் 2016 19:41:07

நோயின்றி வாழ நீண்ட நேரம் அமர்ந்தபடி இருக்காதீர்கள்

நோயின்றி வாழ நீண்ட நேரம் அமர்ந்தபடி இருக்காதீர்கள்

தனிமனித உடல், மன ஆரோக்கியத்தில் புதிய புதிய சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறோம். 25-30 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கேயோ யாருக்கோ பாதித்திருக்கிறது என்று சொல்லிக் கேள்விப்பட்ட புற்றுநோய், மாரடைப்பு, உடல்பருமன் நோய், நீரிழிவு நோய், மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்கள் நமக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள், வேண்டப்பட்டவர் களையும் சர்வ சாதாரணமாகப் பாதிப்பதை இன்றைக்குப் பார்க்கிறோம். பெருகிவரும் உடல் உழைப்பின்மை, உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம், வேலைப்பளு, குடிப்பழக்கம்,....... மேலும்

03 அக்டோபர் 2016 19:41:07

காந்தி ஜெயந்தி புரட்டு

காந்தி ஜெயந்தி புரட்டு

06-10-1929 குடிஅரசிலிருந்து.... திரு.காந்தி செல்வாக்கில் இருந்த காலத்தில் அவர்களை உண்மையில் பின் பற்றினவர்களாகவாவது இருந்திருந்தாலும் அல்லது அவர் இப்போது மூலையில் அடங்கிவிட்டாலும் அவருடைய அப் போதைய கொள்கையையாவது அல்லது இப்போதைய கொள்கையையாவது பின் பற்றுகின்றவர் களாகவாவது இருந்தாலும் ஒரு விதத்தில் காந்தி ஜெயந்தி கொண்டாட யோக்கியதை உடையவர்கள் என்று சொல்லலாம். அப்போதும் கீழ்ப்படியாமல், இப்போதும் ஏற்றுக் கொள்ளாமல் மூலையில் உட்கார வைத்து ஜெயந்தி கொண்டாடுவது எதற்குச் சமானம் என்று பார்க்கப் போனால் புத்தரை....... மேலும்

01 அக்டோபர் 2016 17:58:05

இந்திய மடாதிபதிகள்

இந்திய மடாதிபதிகள்1-12-1929, குடிஅரசிலிருந்து... இந்திய மடாதிபதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்திய செல்வங்களை கொள்ளையடித்து பாழாக்கு கின்றவர்கள் எத்தனை பேர் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுமென்கின்றோம். சங்கராச் சாரிகள் என்று ஒரு ஏழு எட்டு பார்ப்பனர்கள் இந்தியா விற்குள் தினமும் கிராமம் கிராமமாக பட்டணம் பட்டணமாய்ச் சுற்றிசுற்றி அடிக்கும் பகற்கொள்ளைக்கு ஏதாவது அளவு கண்டுபிடிக்கக் கூடியதாக இருக் கின்றதா? ஒவ்வொரு சங்கராச்சாரிக்கும் அரண்மனை போல் மடமும், யானை, குதிரை, பல்லக்கு, படைகள்,....... மேலும்

30 செப்டம்பர் 2016 16:37:04

திருவாங்கூர் சமஸ்தானம்

திருவாங்கூர் சமஸ்தானம்1-12-1929 - குடிஅரசிலிருந்து.... திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்கமாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும். இதன் பரப்பு 7500 சதுர மைல்களாகும். இந்த நாற்பது லட்சம் ஜனத்தொகையில் ஏறக்குறைய சரிபகுதி ஜனங்கள், அதாவது இருபது லட்சம்....... மேலும்

30 செப்டம்பர் 2016 16:35:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.25- விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, நல்ல பயிற்சியளித்தால் மட்டுமே சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக சாதிக்க முடியும்.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு சிறந்த வசதிகளையும், நிதி உதவியையும் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று நீச்சல் வீரர் பிரசாந்த் கர்மகர், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, ஜிம்னாஸ்டிக் வீரர் ஆசிஷ் குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.

தீபிகா: ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு எங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, பயிற்சியில் ஈடுபடுவதற்கான வசதிகள், வெளிநாட்டு மைதானங்களைப் பற்றி தெரிந்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் வெளிநாடுகளில் பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம். இதேபோல் ஒலிம்பிக்கிலும் சாதனை படைப்பதற்கு அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

ஒலம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அதற்கு 3 அல்லது 4 மாதங்கள் தென் கொரியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற வேண்டும். ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு வெளி நாட்டு பயிற்சியாளர் கண்டிப்பாக அவசியம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார். காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற தீபிகாவுக்கு சஹாரா நிறுவனத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஆசிஷ் கூறியது: காமன்வெல்த் போட்டிக்குப் பின்னர் நவீன விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் யாருக்கும் உதவாமல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலேயே கிடக்கிறது. பயிற்சியை மேற்கொள்ள நவீன உபகரணங்கள் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றேன். இதேபோல் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க வேண்டுமானால் நான் பயிற்சி மேற் கொண்டு வரும் அலாகாபாத் பயிற்சி மையத்தில் உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

காமன்வெல்த் போட்டியின்போது எங்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதனால் சிறப்பான வெற்றியும் பெற்றோம்.

அதன்பிறகு அந்த உபகரணங்கள் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலேயே வைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன. எனவே என்னைப் போன்ற ஜிம்னாஸ்டிக் வீரர்களை அங்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதே கருத்தையே நீச்சல் வீரர் பிரசாந்தும் வலியுறுத்தினார். இளம் சாதனையாளர் விருது பெற்றபின் அவர்கள் இதைத் தெரிவித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner