காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் முதல்வர் - பிரதமருக்குக் கடிதம்
முன்பு அடுத்து Page:

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார்

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றார் சென்னை, டிச.31 அதிமுகவின் பொதுச் செய லாளராக தேர்வு செய்யப் பட்ட  சசிகலா, இன்று (31.12.2016) காலை பொறுப் பேற்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்திற்கு ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே வந்தார். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித் தும், ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செய்த பின்னர், அதிமுகவின் பொதுச்செயலாளர் அறைக்கு சென்றார்.  பொருளாளர் ஓ.பி. எஸ்., அவைத்தலைவர் மதுசூதனன், மக்களவை துணைத்....... மேலும்

31 டிசம்பர் 2016 16:52:04

எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் திருச்சி, டிச.31 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி திருச்சி ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் சட்டை அணியாமல் செத்த எலி மற் றும் மண் சட்டியுடன் வந்தனர். சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு....... மேலும்

31 டிசம்பர் 2016 16:23:04

தொடர்ந்து உயிரிழக்கும் பரிதாபம் பயிர் கருகியதை கண்டு பெண் உட்பட மேலும் 5 விவசாயிகள் உயிரிழப்பு

தொடர்ந்து உயிரிழக்கும் பரிதாபம் பயிர் கருகியதை கண்டு பெண் உட்பட மேலும் 5 விவசாயிகள் உயிரிழப்பு

தொடர்ந்து உயிரிழக்கும் பரிதாபம்பயிர் கருகியதை கண்டு பெண் உட்பட மேலும் 5 விவசாயிகள் உயிரிழப்பு நாகை, டிச.31 தண்ணீரின்றி பயிர் கருகி யதை கண்ட விவசாயிகள் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டம் கடம்பர வாழ்க்கை பகுதியில் பெண் விவசாயி சரோஜா உயிரிழந்துள்ளார். தண்ணீரின்றி நெற்பயிர் கருகியதை கண்ட சரோஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 57 ஆகும். மேலும்  வேதாரண்யம் அருகே பயிர் கருகியதால் மணமுடைந்த 2 விவசாயிகள் உயிரிழந்....... மேலும்

31 டிசம்பர் 2016 16:19:04

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தி.மு.க. பொருளாளர் மு.க.…

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை: மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை, டிச. 30- கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் பிடிபட்டவர்கள் தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (29.12.2016) வெளியிட்ட அறிக்கை: கருப்புப் பண ஒழிப்பு விவ காரத்தில் “குறுகிய கால சிரமம், நீண்ட கால பயன்’ என்று பிரதமர்....... மேலும்

30 டிசம்பர் 2016 15:34:03

நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பு சென்னை, டிச.29 கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்கான நிபந் தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சேவை மய்யங்களுக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ்.மணிஸ்வரராஜா தெரிவித்தார்.இது தொடர்பாக செய்தியாளர் களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: கடவுச்சீட்டு விண்ணப்ப தாரர்கள் 1989ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவராக இருப்பின் பிறப்புச் சான்று கட்டாயம் என்பது தற் போது விலக்கிக் கொள்ளப்பட்டுள் ளது. மேலும், விண்ணப்பத்துக் கான....... மேலும்

29 டிசம்பர் 2016 16:11:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.20- காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலை வரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தலைவ ராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறி கிறேன். காவிரி நீரை மாநிலங் களுக்கு இடையே பகிர்ந்து அளிப் பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற் றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலு வையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசா ரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16-3-2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17-4-2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23-3-2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்து விட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலை யில், காவிரி நடுவர் மன்றத் தலை வரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத் தையும் ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-இன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல் பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கை கள் எதையும் தொடர முடியாது. இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.- இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டு உள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner