காவிரி நடுவர் மன்றம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
முன்பு அடுத்து Page:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசே எதிர்ப்பதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசே எதிர்ப்பதா? திமுக தலைவர் கலைஞர் கண்டனம்

சென்னை, அக்.4 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக்கொண்ட மத்திய அரசு இப்பொது எதிர்ப்பது கண்டனத்துக்கு உரியது என திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:காவிரிப் பிரச்சினை குறித்து  உச்ச நீதி மன்றம்  30.-9-.2016 பிறப்பித்த உத்தரவில், “வரு கின்ற 4ஆம் தேதிக்குள்  மத்திய அரசு, காவிரி  மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண் டும்.   தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச் சேரி  ஆகிய நான்கு மாநிலங்களும்  காவிரி மேலாண்மை....... மேலும்

04 அக்டோபர் 2016 15:36:03

மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு பேட்டரி கார் சேவை

 மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு பேட்டரி கார் சேவை

ஆலந்தூர், அக்.3 சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய முனையங்களுக்கு பேட்டரி கார் சேவை நேற்றுமுன் தொடங்கியது. சின்னமலை -விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கி செயல் பட்டு வருகிறது. விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் மூலம் விமான நிலையம் வரும் பயணிகள், ரயில் நிலையத்தில் இருந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு தங்கள் உடைமைகளுடன் செல்ல கடினமாக....... மேலும்

03 அக்டோபர் 2016 16:52:04

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்

புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்

திருவாரூர், அக்.2 மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில் வெளியிட்டு, பொது மக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங் கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை விளக்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் அவர் திருவாரூரில் அண்மையில்,  அளித்த நேர்காணல்: புதிய கல்விக் கொள்கை முன் வடிவுகள் குறித்து....... மேலும்

03 அக்டோபர் 2016 11:34:11

கருநாடகத்திற்கு லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

 கருநாடகத்திற்கு லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

ஓசூர், அக்.2 கர்நாடகத்திற்கு லாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடு வோம் என தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தென்னிந்திய லாரி உரிமை யாளர்கள் சம்மேளன கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென் னிந்திய லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கோபால்  தலைமை தாங் கினார். தமிழ்நாடு லாரி உரிமை யாளர்கள் சங்க....... மேலும்

03 அக்டோபர் 2016 11:17:11

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும்

சென்னை, அக்.2 தமிழகத்தின் தற்போதைய தேவை சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீர் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை கலைஞர் வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று (1.10.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காவிரிப் பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றம் 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், "வருகின்ற 4-ஆம் தேதிக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு ஒன்றாம் தேதி....... மேலும்

02 அக்டோபர் 2016 16:22:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.20- காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த என்.பி.சிங், உடல்நலக் குறைவு காரணமாக ராஜினாமா செய்துவிட்டார் என்று நான் அறிகிறேன்.

காவிரி நீரை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிப்பது குறித்து காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை இதுவரை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், காவிரி நதிநீர் தாவா தொடர்பான பிரச்சினையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்கக் கோரி மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ன் கீழ் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து காவிரி நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கக் கோரி தமிழக அரசு 16.3.2012 அன்று காவிரி நடுவர் மன்றத்தில் மனு செய்தது. இந்த மனு, 17.4.2012 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நடுவர் மன்றம் 23.3.2012 அன்று அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால், காவிரி நடுவர் மன்றத் தலைவர் என்.பி.சிங் ராஜினாமா செய்துவிட்டதால், அன்றைய தினம் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நடுவர் மன்றத் தலைவரின் ராஜினாமா, தமிழக மக்களின் மனதில் கடும் கவலையையும், ஆபத்து வருமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டப் பிரிவு 4 (2)-இன்படி காவிரி நடுவர் மன்றம் தலைவர் இல்லாமல் காவிரி நடுவர் மன்றம் செயல் பட முடியாது.

இந்த சட்டப்பிரிவு 5 ஏ-ன்படி, காவிரி நடுவர் மன்றத் தலைவர் இல்லாமல் தீர்ப்பாய நடவடிக்கைகள் எதையும் தொடர முடியாது.

இந்தச் சூழ்நிலையில், தாங்கள் நேரடியாகத் தலையிட்டு காவிரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner